கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக அரசு ஊழியர்களின் சம்பள பதிவு இணையதள மேம்பாடு – நிதித்துறைக்கு கோரிக்கை...

 தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பள பதிவு இணையதளமான ‘ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்.,’ (IFHRMS) என்ற இணையதளம் பல மாதங்களாக கோளாறாக உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிதித்துறை இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளனர். மேலும் அதனை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் போன்றோருக்கு அரசின் கருவூலம் மற்றும் சார் கருவூலம் மூலமாக சம்பளம் வழங்கப்படும். இந்த செயலில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க அரசு சம்பள பதிவு இணையதளம் ‘ஐ.எப்.ஹெச்.ஆர்.எம். எஸ்.,’ உருவாகியுள்ளது. இதன் செயல்பாடுகளை விப்ரோ நிறுவனம் கண்காணித்து வருகிறது.

மாதந்தோறும் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் குறித்த பதிவை இந்த இணையதளம் மூலமாக பதிவு செய்த பின் அதனை சரி செய்து கணக்கு அதிகாரிகள் சம்பளம் வழங்குவார்கள். ஆனால் இந்த இணையதளம் மிகவும் மெதுவாகவும், திறன் இல்லாமலும் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் சம்பள பதிவு செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் அந்த இணையதளத்தில் விரைவில் சர்வர் செயல்திறனை அதிகரிக்கவும், அனைத்து வகை தகவல்களையும் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யவும் இந்த இணையதளத்தில் மேம்பாடுகள் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிதித்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக கணக்கு தணிக்கை வரை பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அரசு விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...