கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மாணவர் வருகை விவரம் - பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படவுள்ளது...

 


பள்ளிகளில் மாணவர்களின் வருகை நேரம் மற்றும் வெளியேறும் நேரம் குறித்த விபரத்தை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், வரும், 19ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளி திறக்கப்படுகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும்; ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சம், 25 மாணவர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.  'ஆன்லைன்' வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பினால், அனுமதிக்க வேண்டும், என்பது உட்பட பல வழிகாட்டுதல்களை பின்பற்ற ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்கள், பள்ளிகளுக்கு வருவதற்கு, பெற்றோரின் எழுத்து பூர்வ ஒப்புதல் கடிதம் தேவை. அதனால், பள்ளி திறப்பின் முதல் நாளில், பெற்றோர் தவறாது பள்ளிக்கு வர வேண்டும். அதேபோல், அன்று மாலை, மீண்டும் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும். இதுவரை, மாணவரின் 'ஆப்சென்ட்' விபரம் மட்டுமே பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இனிமேல், காலையில் வருகை நேரம், மாலையில் பள்ளியில் இருந்து வெளியேறும் நேரம் குறித்த விபரம், தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...