கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EPFO செய்துள்ள புதிய மாற்றம்.. PF பணம் எடுக்கமுடியாமல் இருக்கிறீர்களா? இந்த வழியை பின்பற்றுங்கள்...

 கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கியிருந்த காலத்தில், பெரும்பாலானவர்களின் பொருளாதாரத்துக்கு வருங்கால வைப்பு நிதி பெரிதும் உதவியது. தங்கள் அக்கவுண்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பொருளாதார தேவைகளை சமாளித்துக்கொண்டனர்.

இருப்பினும், EPFO - அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதில் பலரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பணியாளர்களின் மனநிலையை புரிந்து கொண்ட வருங்கால வைப்பு நிதியகம், அவர்களின் குறைகளை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன்படி, பணம் எடுப்பதில் சிக்கல் இருந்தால் வாட்ஸ்ஆப் மூலம் குறைகளை அனுப்பும் வசதியை மண்டல வாரியாக அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், மற்றொரு நடவடிக்கையாக முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை பணியாளர்களே அப்டேட் செய்யும் புதிய வசதியை வருங்கால வைப்பு நிதியகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், பணி செய்த நிறுவனம் அப்டேட் செய்ய வேண்டும் அல்லது EPFO அலுவலகத்துக்கு நேரடியாக சென்று உரிய சான்றுகளை சமர்பித்து முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்ய வேண்டும். ஆனால், அந்த நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள வருங்கால வைப்பு நிதியகம், ஆன்லைன் மூலம் ஊழியர்கள் தாங்களாவே முன்னாள் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

முன்னால் நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை ஆன்லைன் மூலம் EPFO அக்கவுண்டில் அப்டேட் செய்யும் வழிமுறை;  

Step 1:  EPFO வலைதளத்துக்கு சென்று உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள UAN member எண்களை பயன்படுத்தி Login செய்ய வேண்டும். அதில் இருக்கும் Manage பிரிவுக்கு செல்லுங்கள்

Step 2:  அங்கு இருக்கும் 'Mark Exit' என்ற ஆப்சனை தேர்வு செய்து அதில் இருக்கும் PF account நம்பரை தேர்வு செய்யுங்கள்

Step 3: பின்னர், நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்யுங்கள்

Step 4: கீழே கொடுக்கப்பட்டுள்ள "I have read the below points carefully" என்பதை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்('Request OTP')

Step 5: நீங்கள் EPFO அக்கவுண்டில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP வந்திருக்கும். அதனை EPFO portal -ல் அப்டேட் செய்யுங்கள்

Step 6: இந்த நடைமுறைகளை சரியாக செய்யும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்று உங்கள் கம்யூட்டர் திரையில் காட்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...