கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதிவுத்துறையில் காலியாக உள்ள 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி...

 பதிவுத்துறை தலைவர் சங்கர் அனைத்து மண்டல டிஐஜி, மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் காலியாக உள்ள 1376 முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

* அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் நிரப்ப முத்திரை சட்ட விதி 25ன் படி தகுதி பெற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட வேண்டும். முத்திரை சட்ட விதிப்படி, போதிய கல்வித் தகுதி, முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம், உரிமம் கோரும் பகுதியில் வசித்தல், உடல் தகுதி, செல்வ நிலை சான்று ஆகிய விவரங்களுடன் விண்ணப்பங்கள் இருத்தல் வேண்டும்.

முத்திரைத்தாள் விற்பனை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் கோரி ஒவ்வொரு மாவட்ட பதிவாளரும் விளம்பர பலகையில் ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும். 

* நேர்முகத்தேர்விற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்னதாக அஞ்சல், விண்ணப்பத்தாரர்களை சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

* நேர்முக தேர்வின் போது அசல் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

* முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) தலைமையிலான மாவட்ட பதிவாளர் (தணிக்கை) மற்றும் ஒரு மூத்த சார்பதிவாளர் அடங்கிய ஒரு குழு சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவரால் ஏற்படுத்தப்பட வேண்டும். 

மேற்கண்ட அலுவலர்கள் விடுப்பிலோ, அப்பணியிடம் காலியாக இருப்பின், துணைப்பதிவுத்துறை தலைவர்கள் வேறு மாவட்ட பதிவாளர்/உதவி பதிவுத்துறை தலைவர் நிலை அலுவலரை கொண்டு குழு அமைக்க வேண்டும். அக்குழுவின் விவரத்தினை தவறாது இவ்வலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்

* முத்திரைத்தாள் விற்பனையாளர் நியமனம் தொடர்பான அறிவிப்பு முதல் நியமனம் வரையான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து பதிவு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட பதிவாளர்கள் புகாருக்கிடமின்றி செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...