கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 02.02.2021(செவ்வாய்)...

 


🌹சண்டையின் போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல.

வார்த்தையை விட்டால் உறவு பிரியும் என்பதை உணர்ந்தவர்கள்.!

🌹🌹தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களைவிட 

மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு  11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் அவர்கள் வலியுறுத்தல்.                          

🎀🎀பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணை வெளியீடு.

🎀🎀அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது -  முதல்வர் அறிவிப்பு

🎀🎀சிபிஎஸ்இ: 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு

🎀🎀பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு

🎀🎀DSE - பள்ளிக் கல்வி – தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை - மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

🎀🎀முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி: தோ்வான அமைச்சுப் பணியாளா்களின் பட்டியல் வெளியீடு.

🎀🎀பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

🎀🎀தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம்:  ஆசிரியர் சங்கங்கள்  வலியுறுத்தல்

🎀🎀சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 40 ஆண்டுகள் வரை, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' உள்ளவர்கள், மீண்டும் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

🎀🎀ஆந்திராவில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

🎀🎀தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்- 9,69,047 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை இலவச டேட்டா வழங்கப்படும்.

🎀🎀நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பொருளாதார நீட்சிக்கான அறிகுறி இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.*

மத்திய பட்ஜெட்டில் வாழ்வாதாரம் பறிபோன தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்கள் எதிர்ப்பை மீறி சேலம் 8 வழிச்சாலை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்திருப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்

🎀🎀சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி

தமிழக அரசின் தளர்வை அடுத்து, 50% ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ அனுமதி

🎀🎀80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை கைவிட திமுக வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

🎀🎀மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசின் பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

நிதிப் பற்றாக்குறையை குறைக்க நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி வரியில் எந்த குறைப்பும் இல்லை எனவும் கூறினார்

🎀🎀பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி தமிழகத்தில் 2-ம் கட்ட பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ராகுல் காந்தி பரப்புரை செய்ய உள்ளார். 6 மாவட்டஙகளில் நாளொன்றுக்கு 120 கி.மீ. தொலைவு பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

🎀🎀தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா,மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.*

தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

🎀🎀குழந்தைகளுக்கு அக்டோபரில் தடுப்பூசி சீரம் இந்தியா நிறுவன அதிகாரி தகவல்

'குழந்தைகளுக்கு, கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும்,'' என, சீரம் நிறுவன மூத்த அதிகாரி நம்பியார் தெரிவித்தார்.

🎀🎀தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்.

🎀🎀சிறு, குறு நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவுமாறு பட்ஜெட் அமைய வேண்டும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெற வேண்டும்; சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் 

-ராகுல்காந்தி வலியுறுத்தல்

🎀🎀தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகள் திமுகவிடம் கேட்க வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்

🎀🎀ராகுல் வருகையால் திமுகவும் பயனடைவார்கள் - தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

ராகுல்காந்தியின் அடுத்தக்கட்ட வருகை குறித்த காங்கிரசின் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேச்சு

🎀🎀பழைய வாகனங்களை அகற்ற நடவடிக்கை!

பழைய வாகனங்களை கழிக்க புதிய ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம்! 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட

தனியார் வாகனங்கள், 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களை அகற்ற நடவடிக்கை.

-நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

🎀🎀சென்னையில் 119 கி.மீ தூரத்திற்கு ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🎀🎀அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் பணி தொடரும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

🎀🎀தேர்தல் பட்ஜெட்

தேர்தல் நடக்கும் 3 மாநிலங்களில் பொருளாதார சாலைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

தமிழகம் - ரூ.1.03 லட்சம் கோடி (3,500 கி.மீ)

கேரளா - ரூ.64,000 கோடி (1100 கி.மீ)

மே.வங்கம் - ரூ. 25000 கோடி (650 கி.மீ) 

- நிதியமைச்சர் அறிவிப்பு.

🎀🎀தேசிய மொழிகள் மொழிபெயர்ப்பு திட்டம் உருவாக்கம்

அரசின் அறிவிப்புகள் முக்கியமான திட்டங்கள் ஆகியவை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்வதற்கான பணிகளை இந்த அமைப்பு செய்ய உள்ளது.

🎀🎀நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்.

🎀🎀ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

🎀🎀மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை

🎀🎀தங்கம் மற்றும் வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை; தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதம் ஆகக் குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🎀🎀ஏர் இந்தியா பாரத் பெட்ரோலியம் ஐடிபிஐ வங்கி தேசிய துறைமுக கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வரும் நிதியாண்டில் விற்க முடிவு

இவற்றை விற்பதன் மூலம் அடுத்த ஒரே ஆண்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்ட திட்டம்.

🎀🎀விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் சிங்கு, காஸிப்புர், திக்ரி பகுதிகளில் இணைய சேவை துண்டிப்பு,இன்று இரவு 11 மணி வரை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு.

🎀🎀பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக,  பெட்ரோலில் லிட்டருக்கு 2.5 ரூபாயும் 

டீசலில் லிட்டருக்கு 4 ரூபாயும் உயரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

🎀🎀முக்கிய துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள்:

பாதுகாப்பு துறை - ₹4.78 லட்சம் கோடி

உள்துறை - ₹1.66 லட்சம் கோடி

ரயில்வே துறை - ₹1.1 லட்சம் கோடி

வெளியுறவு துறை - ₹18,154.73 கோடி

🎀🎀பிற நாடுகளுக்காக மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு(₹):

பூட்டான் - 2,884.65 கோடி

மொரீஷியஸ் - 1,025 கோடி

ஆப்கானிஸ்தான் - 400 கோடி

மாலத்தீவு - 300 கோடி

மியான்மர் - 300 கோடி

பங்களாதேஷ் - 200 கோடி

இலங்கை - 200 கோடி

சீஷெல்ஸ் - 140 கோடி

நேபாளம் - 88 கோடி

மங்கோலியா - 2 கோடி

🎀🎀மத்திய பட்ஜெட் எத்ரிபார்ப்புகளை நிறைவேற்றவில்லை 

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து

🎀🎀🎀மத்திய அரசால் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் போடப்பட்டுள்ளது; தேசத்தின் வளர்ச்சியும், தனி மனித வளர்ச்சியும் இந்த பட்ஜெட்டானது பிரதிபலிக்கிறது, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தமிழகத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது

- எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்.

🎀🎀சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஒரு லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றியுள்ளது 

தமிழக திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை 

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🎀🎀மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உகந்த பல்வேறு அறிவிப்புகள் உள்ளன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

🎀🎀மகிழ்ச்சியையும், கவலைகளையும் தரும் மத்திய பட்ஜெட்

- டிடிவி தினகரன்

🎀🎀எனக்கு எதிரான பிடிவாரண்ட் பிறப்பித்ததாக வெளியான செய்தி பொய்யானது 

- இயக்குநர் ஷங்கர் விளக்கம்.

🎀🎀கருவில் இருக்கும் குழந்தைக்குக்கூட இரட்டை இலையை பிடிக்கும்; மதுரையில் நடைபெற்ற வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

🎀🎀கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகர சந்தையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு நேற்று ஆய்வு செய்தது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...