கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடு முழுவதும் 92% மாணவர்கள் கற்றல் திறனை இழந்துள்ளனர் – ஆய்வின் முடிவில் தகவல்...



 அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்க முடியாத நிலை உள்ளதால் 92% மாணவர்கள் குறைந்தபட்சம் தங்களது ஒரு மொழி திறனை இழந்துள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது .


 மாணவர்கள் கற்றல் திறன்:

 நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் கற்றல் திறனில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சார்பில் சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 5 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது 44 மாவட்டங்களில் உள்ள 1,137 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 16,067 மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன .


அதில் 92% மாணவர்கள் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழித்திறன் என்பது ஒரு பாடம் குறித்து விளக்குவது ஆகும். அந்த பாடம் தொடர்பான வார்த்தைகளை வாசிப்பது, அந்த பாடம் குறித்த புதிய வாக்கியங்களை அமைப்பது போன்றவை ஆகும் .


 அதே போல 82% மாணவர்கள் கணித பாடங்களில் திறனை இழந்துள்ளனர். இந்த கற்றல் இழப்பு பெரும்பான்மையான மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது. எனவே அரசு இந்த குறைபாடுகளை போக்க சிறப்பு வகுப்புகள், கூடுதல் நேரம், சமூகம் சார்ந்த கற்றல் செயல்பாடுகள் மற்றும் பொருத்தமான பாடத்திட்ட பொருட்கள் ஆகியவை மூலம் மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...