கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'பசு அறிவியல்' தேர்வு: மாணவர்கள் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு...

 


நாடு முழுவதும் பிப்.25-ம் தேதி நடைபெற உள்ள 'பசு அறிவியல்' தேர்வில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மத்திய அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (தேசிய பசு ஆணையம்) செயல்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பசுக்களைப் பாதுகாப்பதற்காக இந்த ஆணையம் கடந்த 2019-ல் அமைக்கப்பட்டது. இதன் சார்பில் கொள்குறி வகைத் தேர்வு வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. இணையதளம் மூலம் நடைபெறும் இத்தேர்வில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.


இந்நிலையில், 'காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்' என்ற பெயரில் நடைபெறும் தேர்வுகளில் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இளம் மாணவர்களிடமும், பிற குடிமக்களிடமும் உள்நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து அறியச் செய்யவும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


தேர்வுக்கான பாடத்திட்டம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையதளத்தில் இருக்கும். தேர்வில் பங்கு பெறுவோர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு. வெற்றி பெறும் நபர்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns