கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாட்களில் துறைத் தேர்வுகள் - பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு...

 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வு இன்று மற்றும் 20 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் பள்ளி வேலை நாட்களில் நடைபெறுவதால் சிலர் விடுப்பு எடுத்து அந்த தேர்வுகளில் கலந்துகொள்ள உள்ளனர். 

இதனால் அவர்களது வகுப்புகளில் மாற்று ஆசிரியர்கள் இல்லாமல் தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை காரணமாக பாடங்கள் நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளின் படி ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என பணி செய்ய வேண்டும். பள்ளி நாட்களில் இந்த தேர்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகின்றன. எனவே துறை தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aided School Deployment - DEE Proceedings

  உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர்...