கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.03.2021 (திங்கள்)...

 


🌹சரியோ,தப்போ தைரியமா பேச கத்துக்கணும் 

இங்க பதில் சொல்றதுக்கு பயந்தாலே பாதி தப்பு நம்ம தலையில கட்டிருவாங்க.!

🌹🌹புரிதல்கள் இல்லா  

வாழ்க்கையில் புதையலே கிடைத்தாலும் பயனில்லை.!!

🌹🌹🌹புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை.

முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘2% ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 01-01-2021 நிலவரப்படியான தகுதியுள்ள பணியாளர்கள் விடுபட்டது - மேல்முறையீடு அளித்துள்ளது - விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு

📕📘கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்

📕📘வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான மேல் நடவடிக்கைகளை ரத்து செய்தல் சார்ந்து மதுரை  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

📕📘பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் வருகைப்பதிவேட்டுடனும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளி / அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டுடன் சார்ந்த  அலுவலகங்களில்  தவறாமல் ஆஜராக தெரிவித்தல் சார்பாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு 

📕📘ஆத்தூர் அருகே  காட்டுக்கோட்டை தலைமை ஆசிரியர் மாறுதல் - அவரே வேண்டும் என மாணவ மாணவிகள் மறியல்

📕📘 கற்போம் எழுதுவோம் இயக்கம்  வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் கற்போர்கள் 120 மணி நேரம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 26.03.2021 அன்று வரை தொடர்ந்து மேற்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு பள்ளிக்கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் உத்தரவு.

📕📘GPF, TPF ஆசிரியர்களின் கவனத்திற்கு

👉ஆசிரியர் நல நிதி சந்தா ₹20,000 க்கு மேல் செலுத்துபவர்கள் மார்ச் மாத ஊதிய பட்டியலில் ₹20,000 ஆக குறைத்துக் கொள்வது நல்லது.

👉மத்திய அரசு பட்ஜெட்டில் ₹ 2,50,000 க்கு மேல் செலுத்தும் சந்தாவினால் கிடைக்கும் வட்டி தொகைக்கும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

👉GPF/TPF சந்தாவை எந்த மாதமும் உயர்த்திக்கொள்ளலாம்.ஆனால் சந்தாவை குறைக்க மார்ச் மாதத்தில் மட்டுமே குறைக்க முடியும்.                                                                           📕📘ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது

📕📘அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை - கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சந்திக்கிறார்

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம்

இன்று நண்பகல் 12.30 மணிக்கு  தேர்தல் வழிமுறைகள் தொடர்பாக ஆலோசனை

📕📘வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.

சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல்.

📕📘அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணி என்ற பெயரில் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்றத் தேர்தல் பணிக்குழு மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்

📕📘மார்ச் 14ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் திட்டமிடப்பட்டிருந்த திமுக 11வது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலாக திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டம் என தகவல்.

📕📘கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்

📕📘"என்னால் தமிழ் மொழியை கற்க முடியவில்லை" - நரேந்திர மோதி வருத்தம்

📕📘தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை 

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுரை.

📕📘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு 'robot' சின்னம் ஒதுக்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

📕📘பிரதமரை போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.. புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

📕📘இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

📕📘இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளாா்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns