கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.03.2021 (புதன்)...

 


🌹நம்மை பிடித்துவிட்டால்,                                         நாம் என்ன பேசினாலும் ரசிப்பார்கள்.

நம்மை பிடிக்காவிட்டால் நாம் எப்படி பேசினாலும் வெறுப்பார்கள்.

இதுதான் மனித இயல்பு.!

🌹🌹மனசு காயப்பட்டால் பிடித்தவர்களிடம் ஆறுதல் தேடலாம்.

ஆனால் பிடித்தவர்களே காயப்படுத்தினால் 

யாரிடம் ஆறுதல் தேடுவது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

⛑⛑அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

⛑⛑கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது

⛑⛑புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

⛑⛑தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் (1 முதல் 5ம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்கிற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. கடைசி ஒரு மாதமாவது பள்ளியை திறக்க கோரிக்கை. 

⛑⛑கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. தேர்வுத் தாளில் சினிமா பாடலை எழுதிய மாணவனின் பெற்றோரை ஆசிரியர் அழைத்து வர சொன்னதால்  விபரீத முடிவு எடுத்துள்ளார்.

⛑⛑விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

⛑⛑ஒரே பதவியில் தேங்கி நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு - 30 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகளாக உயர்வு அரசாணை வெளியீடு

⛑⛑27.04.2020-க்கு பிறகு EL சரண்டர் விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து ஆணை பிறப்பித்து ஆனால் பணமாக பெற்றுக் கொள்ள நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவற்றை மீண்டும் அனுமதித்து பணமாக பெற்றுக் கொள்ள அரசாணை வெளியீடு GO NO:12நாள்:8.03.2021.                                                                       

⛑⛑முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு

⛑⛑மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

⛑⛑SGT,BT,PG ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணை வெளியீடு.       

⛑⛑ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!(அரசாணை எண் 58 முதல் 92 முடிய 80 பக்கங்கள் கொண்ட தொகுப்பு)

⛑⛑அரசாணைகள் எண்: 58 முதல் 67 & 74, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 68 முதல் 75 (74 தவிர), நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 76 முதல் 85, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑அரசாணைகள் எண்: 86 முதல் 92, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு.

⛑⛑மதவாத சக்திகளுடன் அதிமுக கூட்டணியில் இருப்பதால், கூட்டணியில் இருந்து விலகல்,

திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

இந்திய தேசிய லீக் கட்சி

⛑⛑என் மீது இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியை பாஜக கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்த பாஜக-வினர் திட்டமிட்டு சதி முயற்சி. மேலும் நான் 100 % இந்துப் பெண்ணாக இருந்தாலும் அனைத்து மக்களையும் நேசிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑திமுக-கொமதேக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் கொமதேக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.                                                                                                                                            

⛑⛑தேமுதிகவிற்கு வாழ்வா சாவா என்ற நிலையில் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது.

சின்னத்தையும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியிலும் தங்களை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.

⛑⛑புதுவை என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள்; பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்கள்:

ரங்கசாமி

⛑⛑குடும்பத்  தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடும்பத்  தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை என்ற திமுகவின் அறிவிப்பு பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரவேற்பு பற்றி உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி ரூ.1,500 அறிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்                                                        

⛑⛑திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு 55 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் – ஈரோடு பக்தர் உபயம்

⛑⛑காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2014ல் காங்கிரஸ் ஆட்சி நிறைவு பெற்ற போது LPG சிலிண்டரின் விலை ரூ 410. இன்று விலை ரூ 820. திரு மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியா இரண்டு மடங்கு முன்னேறியிருக்கிறது!, என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

⛑⛑திமுக ஆதரவு திரும்பப் பெறப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை;

 அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை செயற்குழுவில் முடிவெடுக்கப்படும்! - 

தமிமுன் அன்சாரி பேட்டி.

⛑⛑டெல்லி எல்லையில் 105-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 105 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்                                         

⛑⛑முதல்வர் அவர்களே நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? என அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

30 மாதங்களுக்கு முன் இதேநாள்  அமைச்சரவைகூடி விடுதலை தீர்மானம் நிறைவேற்றியதாக தமிழகஅரசு அறிவித்தது. கடந்த ஜனவரி 25ம் தேதி அந்த தீர்மானம் செல்லாது என்றார் ஆளுநர். கொள்கை முடிவு எனசொல்லும் முதல்வர் அவர்களே இது குறித்து எடுத்த சட்டநடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

⛑⛑கேஸ் விலையை குறைக்க முடியாத முதல்வர் இலவச சிலிண்டர் கொடுப்பாரா?

வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்துகொண்டு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி 

டிடிவி தினகரன் பேட்டி

⛑⛑வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

️⛑⛑சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் ரூ.4,183ஆக உள்ளது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

⛑⛑குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் 

தடுப்பூசி போட்டு கொண்டபின் ஸ்டாலின்

⛑⛑நாம் கடைக்கு சென்று காய் வாங்கும் போது, கத்திரிகாய் நல்லதா? முத்துனதா? என பார்த்து வாங்குகிறோம். 

அதே போல,அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி

⛑⛑ICC-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தேர்வு.

⛑⛑திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.

174 தொகுதியில் போட்டியிடும் திமுக 

உதயசூரியன் சின்னம் 187 தொகுதியில் களம்காண உள்ளது.

கூட்டணியில் பார்வர்ட் பிளாக் அல்லது வேறு கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் போட்டியிடும் தொகுதியில் எண்ணிக்கை குறையும்.

⛑⛑சென்னை அதிமுக தலைமையகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உடன் பாஜக. குழு சந்திப்பு; பாஜக போட்டியிடும் தொகுதிகள் வெளியாக வாய்ப்பு.

அதிமுக அலுவலகத்தில் அதிமுக- பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை.

பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற பா.ஜ.க முயற்சி.

⛑⛑கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன்

⛑⛑கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம். கோவை அருகே தமிழக கேரள எல்லையில் இருக்கும் 13 சோதனை சாவடிகளில் காண்காணிப்பு தீவிரம்.

⛑⛑மக்கள் மத்தியில் துணை முதலமைச்சருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது

வரும் தேர்தலில் அ.தி.மு.க-பாஜக கூட்டணி வெற்றி பெறும்

-பொன். ராதாகிருஷ்ணன்

⛑⛑அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்.

எல்.கே.சுதீஷ்

👉சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது  

அதிமுகவுக்கு தான் இனி இறங்கு முகம்; அதிமுகவின் தலைமை தான் சரியில்லை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

👉அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு.

👉தேமுதிகவுக்கு நேற்று தான் தீபாவளி- அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்- துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ்

👉செல்வாக்கான, வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர் பட்டியலை மாவட்ட வாரியாக உடனே தயார் செய்க

தேமுதிக மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சி தலைமை அவசர உத்தரவு

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் தகவல்.

👉அதிமுக தேமுதிகவை மதிக்கவில்லை.

நாம் கெஞ்சிக் கொண்டிருக்க அவசியமில்லை. எடப்பாடி தொகுதியில் தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் பழனிசாமியில் டெபாசிட் கூட வாங்க முடியாது

தேமுதிக  முன்னாள் பொருளாளர் இளங்கோவன்.

👉சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல விஜயகாந்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் துரோகம் செய்துவிட்டனர் -தேமுதிக தொண்டர்கள்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியிருப்பது நல்ல விஷயம்  

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்ததே தேமுதிகவின் தயவில் தான் 

- விஜயபிரபாகரன்

👉மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க மாட்டோம்.  அரசியலில் நாங்கள்தான் சீனியர் அதனால் தெய்வத்துடன் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி;  தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் - விஜயபிரபாகரன் பேச்சு

⛑⛑நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக்கட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையிலேயே மவுனமாக இருக்கிறோம்.தேமுதிக பலம் கடந்த தேர்தலிலேயே  தெரிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அந்த கட்சிக்கே பாதிப்பு.

எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் கூறினார்.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை என குடும்பத் தலைவியரே கேட்பர்: ஸ்டாலின்

👉மார் 09,2021

தினமலர்

👉சென்னை: குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1,500 மற்றும் ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் தருவதாக அதிமுக அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 'பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை என குடும்பத் தலைவியரே கேட்பார்கள்' என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தை முதன்மை செயலர் கே.என்.நேரு வெறறிகரமாக நடத்திக் காட்டிவிட்டார். திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிகிறது. குடும்பத் தலைவியருக்கு மாதம்தோறும் ரூ.1,000 'உரிமைத் தொகை' என அறிவித்தேன். உடனே, அடிமை அதிமுக ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.

பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?

குடும்பத்தலைவியரே இதனை கேட்பார்கள். அவர்களிடம் தமிழகம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. ஓயாது உழைப்போம்; இலக்கை நோக்கி ஒன்றுபட்டு உழைப்போம். தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தை காண்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns