கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்ச்சியை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் (TNTET) தேர்வு நடத்தப்படுகிறது.


TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டெட்(TET) தேர்ச்சி விவரங்களை எளிதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வதை பற்றி இங்கே காண்போம்...


முதலில் tnvelaivaaippu.gov.in என்ற வலைதளத்தில் உங்கள் வேலைவாய்ப்பு பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை உள்ளிட்டு உள் நுழைந்து கொள்ளுங்கள்.


> பின்னர்  "ADD QUALIFICATION"- ல் விவரங்களை பதிவு செய்யவேண்டும்


> டெட் தேர்ச்சி பெற்ற வருடம், டெட் தகுதி (TET PASSED) மற்றும் டெட் சான்றிதழ் எண்ணை சரியாக உள்ளீடு செய்து கொள்ளவும்.



 > மேலும் " * "  குறியீடு கொண்ட பிரிவுகளை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்  ( உள்ளீடு தேவை இல்லையெனில் NOT SPECIFIED என்று காண்பித்து கொள்ளுங்கள்)


> அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்த பின்பு " ADD " ஐ கொடுத்து சேமித்துக்  கொள்ளவும். தேவைப்படின் " PRINT " கொடுத்து "PDF " ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..,



> இரண்டு டெட் தாள்களும் தேர்ச்சி பெற்றிருந்தால் மேலே குறிப்பிட்ட படி முதலில் பதிவு செய்துவிட்டு மீண்டும் ADD கொடுத்து " MAJOR SUBJECT " ஐ தேர்வு செய்யாமல் " ancillary2 " மட்டும் கொடுத்து இரண்டாம் டெட் தேர்ச்சியையும் பதிவு செய்து கொள்ளலாம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...