கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் தகுதி தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


பதவி உயர்வுக்கு TET கட்டாயம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தேதி குறித்த தகவல்...

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...



 Teacher Elegibility Test mandatory for promotion Case is coming up for hearing in the Supreme Court on 13.09.2024...







 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023...



>>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 19.08.2024

CORAM

THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH

W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023..


7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangement that was made under G.O.Ms.52 dated 30.03.2006. This adhoc arrangement that was made will not override the judgment of the Division Bench which categorically holds that any appointment made to the post of B.T.Assistant after 29.07.2011, whether by direct recruitment or promotion or by way of transfer, must necessarily pass TET. In view of the same, when a BRTE is interchanged and transferred as a B.T.Assistant after 29.07.2011, to hold the position of the B.T. Assistant, the concerned candidate must have passed TET.


8. Even though the post of BRTE and B.T.Assistant are interchangeable, it is not as if the same person will be holding a dual post. At any given point of time, the concerned person may be holding the post as BRTE or as B.T.Assistant. Therefore, when the person is adorning the role of BRTE and is intended to be changed as B.T.Assistant, it involves a transfer to the post of B.T.Assistant. Once that happens, automatically the mandate prescribed by the Division Bench will come into operation and for all those transfers made after 29.07.2011, for holding the post of B.T.Assistant, TET becomes mandatory.


9. The above clarification will suffice and the same is to be kept in mind by the official respondents when they undertake the exercise of interchangeability between BRTEs and B.T.Assistants.


10. This Writ Petition is disposed of with the above observation. There shall be no order as to costs. Consequently, the connected miscellaneous petitions are closed.


19.08.2024

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு...


 23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET - Teachers Eligibility Test இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு Writ Petition No.12410 of 2024...



Telangana High Court Judgment Order to consider promotion without TET for Teachers appointed as per NCTE Norms 2001 prior to 23.8.2010...



>>> தீர்ப்பு நகல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஜூன் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ ரத்து - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு...



 ஜூன் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ ரத்து - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு...


06.06.2024.

PRESS RELEASE

It is informed that the State Level Eligibility Test (SET)examination Scheduled on 07th and 08th June 2024 is postponed due to technical reasons. The revised date will be intimated later.

REGISTRAR





TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...



 TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி 627 012 

மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்)-2024 

அறிவிப்பு எண்.01/2024 

திருத்தம் 

அரசாணை (நிலை) எண்.5 , உயர்கல்வித் (H1) துறை,  நாள்:  11.01.2021 & அரசாணை (நிலை) எண்.163 உயர்கல்வித் (H1) துறை,  நாள்:  27.08.2021 இன் படி, 5% மதிப்பெண்கள் தளர்வு அனுமதிக்கப்படும். (55% லிருந்து 50% மதிப்பெண்கள்) பட்டியல் சாதி (SC)/பட்டியலிடப்பட்ட சாதி (A)/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)/ சீர்மரபினர் சமூகங்கள் (DNC) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதுநிலை மட்டத்தில்) மற்றும் மாற்றுத் திறனாளிகள். 

TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.05.2024 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விவரங்களுக்கு: www.musuniv.ac.in 

பதிவாளர்/ உறுப்பினர் செயலாளர் 

TNSET 2024 

பதிவாளர்



MANONMANIAM SUNDARANAR UNIVERSITY

Abishekapatti, Tirunelveli 627 012

STATE LEVEL ELIGIBILITY TEST (SET)-2024

Notification No.01/2024

CORRIGENDUM

As per the G.O. (Ms) No.5 Higher Education (H1) Department dated 11.01.2021 & G.O.(Ms) No.163 Higher Education (H1) Department dated 27.08.2021, a relaxation of 5 % marks shall be allowed( From 55% to 50%of the Marks) at the Master's level for the candidates belonging to Scheduled caste (SC)/Scheduled Caste (A)/ Scheduled Tribe/Backward Class (BC)/Most Backward Class (MBC)/ Denotified Communities (DNC)and Differently Abled. Last date for online submission of application for TNSET Exam 2024 is extended up to 5.00 p.m. on 15.05.2024.

For details: www.musuniv.ac.in

Registrar/Member Secretary

TNSET 2024

REGISTRAR


29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு...


 29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் Judgment...


W.P.Nos.693 & 695 of 2024

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 11.01.2024



29.07.2011க்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் ஆண்டு ஊதிய உயர்வு (increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive) தேர்வுநிலை ஊதிய உயர்வு (Selection Grade) ஆகியவை உடனே வழங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



>>> Click Here to Download Judgment W.P.Nos.693 & 695 of 2024 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - DATED : 11.01.2024...


பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...


 பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...



>>> Click Here to Download - Diary No.37664 / 2023 - Tamilnadu Aasiriyar Koottani Vs State of Tamilnadu...


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET)  Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 


அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 



TET பதவி உயர்வு வழக்கு 


இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது 


வழக்கு dismiss செய்யப்படவில்லை 


இடைக்கால தடை வழங்கப்படவில்லை 


1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது 


இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.





*AIFETO..20.11.2023*


*உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TETவழக்கின் விசாரணைத் தொகுப்பு...*


🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*நாம் புலனப் பதிவில் ஏற்கனவே தெரிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET  சம்பந்தமான வழக்கு இன்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு வழக்கறிஞர்களும் அவர்களுடன்  கூடுதல் வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இவ்வழக்கினை இரு அமர்வு நீதியரசர்கள் ஹரிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் விசாரித்தார்கள்.*


 *அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்  கவிதா ராமேஸ்வர்  வாதாடினார்கள்.*


*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள்  உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும்  வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை  வழங்குவதாக  விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*


 *தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*


 *இந்த வழக்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள்  (டிட்டோஜாக்) சார்பில்  உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள  திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய  திடமிட்டு இருக்கிறோம்.*


 *எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*


 *மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வழக்கிற்கு வலு சேர்க்கும்!.. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*


*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.*



 *மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு  தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுள்ள தகவல் தொகுப்பாகும்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*


*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...


ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என்னும் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது...


>>> Diary No 43850/2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...



பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...


>>> Click Here to Download...


DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023


2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...


2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...


2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...


2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...


2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...


2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க இயலாது - மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) செயல்முறைகள் (Unable to grant Selection Grade Order due to non-qualification of Teacher Eligibility Test (TET) - District Education Officer (DEO) Proceedings)...


ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாததால் தேர்வுநிலை வழங்க இயலாது - மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) செயல்முறைகள் (Unable to grant Selection Grade Order due to non-qualification of Teacher Eligibility Test (TET) - District Education Officer (DEO) Proceedings)...


>>> மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) - தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) 2012, 2013, 2017 & 2019 தாள் I & தாள் -II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ-சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி (Teacher Recruitment Board - Tamilnadu Teacher Eligibility Test 2012, 2013, 2017 & 2019 Paper-I & Paper-II Reprint Applications website informs that you can apply for Teacher Eligibility Test Reprint Certificate from 17.07.2023 through e-Sevai Center - Teacher Recruitment Board Press release)...


>>> ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) - தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) 2012, 2013, 2017 & 2019 தாள் I & தாள் -II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இ-சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி (Teacher Recruitment Board - Tamilnadu Teacher Eligibility Test 2012, 2013, 2017 & 2019 Paper-I & Paper-II Reprint Applications website informs that you can apply for Teacher Eligibility Test Reprint Certificate from 17.07.2023 through e-Sevai Center - Teacher Recruitment Board Press release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் தேவை (TET) என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதியரசர்கள் அமர்வின் தீர்ப்பு நகல் (Writ Appeal Nos. 313, 833, 1891, 2050, 2082, 2617, 2795 of 2022 - Copy of Madras High Court Two-Judge Bench Judgment on Teaching Eligibility Test (TET) being compulsory for Promotion of Teachers)...


>>> ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் தேவை (TET) என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதியரசர்கள் அமர்வின் தீர்ப்பு நகல் (Writ Appeal Nos. 313, 833, 1891, 2050, 2082, 2617, 2795 of 2022 - Copy of Madras High Court Two-Judge Bench Judgement on Teaching Eligibility Test (TET) being compulsory for Promotion of Teachers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED : 02.06.2023

CORAM :

THE HONOURABLE MR. JUSTICE R. MAHADEVAN

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Appeal Nos. 313, 833, 1891, 2050, 2082, 2617, 2795 of 2022

&

Writ Appeal Nos. 19, 31, 32, 36 of 2023

&

Writ Petition Nos. 3364 and 3368 of 2023

and

CMP. Nos. 22724, 22726 and 5628 of 2022, 335 and 6349 of 2023, 15716,

20772, 13862, 2384 of 2022, 330, 342, 6060 of 2023, 15447 of 2022,

268 of 2023 and WMP. Nos. 3434 and 3436 of 2023

https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


71. In line with above reasoning, the orders of the learned Judge holding that even those appointed prior to the commencement of the Act must acquire a pass in TET is liable to be set aside. The Secondary Grade Teachers only seeking continuance in service with increments, are fundamentally a different class of persons from those seeking promotion to B.T.Assistant from Secondary Grade Teacher.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


72. In the light of the above narration, taking note of the factual background, the legal provisions spelling out the intention of the legislature and the effect of the subordinate legislation pursuant thereto, the inescapable conclusion of this court would be that every teacher whether Secondary Grade or BT Assistant, whether appointed by direct recruitment or promotion in the case of BT Assistant, after the coming into force of the RTE Act and the NCTE notifications must necessarily possess/acquire the eligibility of a pass in TET. Therefore, the claim that Secondary Grade Teachers appointed prior to the commencement of the Act and notifications will now be eligible for promotion to the post of BT Assistant without passing TET, cannot be countenanced. For any fresh appointments, whether by direct recruitment in the case of Secondary Grade Teachers, or by either direct recruitment or promotion or transfer in the Graduate Assistants/BT Assistants, a pass in TET is an essential eligibility criteria to be fulfilled.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


73. Further, it is made clear that all those appointed prior to 29.07.2011 are exempt from passing TET only for the purpose of continuance in the post of secondary grade teacher or BT Assistant without promotional prospects. Any appointments whether by direct recruitment or promotion or transfer made after 29.07.2011, will have to necessarily adhere to the minimum eligibility criteria of passing TET. https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


CONCLUSION

74. For the sake of clarity and ease of reference, the upshot of the above discussion is as under:https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(a) Any teacher appointed as Secondary Grade Teacher or Graduate Teacher/BT Assistant prior to 29.07.2011 shall continue in service and also receive increments and incentives, even if they do not possess/acquire a pass in TET. At the same time, for future promotional prospects like promotion from secondary grade teacher to B.T. Assistant as well as for promotion to Headmasters, etc., irrespective of their dates of original appointment, they must necessarily possess TET, failing which they will not be eligible for promotion.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(b) Any appointment made to the post of Secondary Grade Teacher after 29.07.2011 must necessarily possess TET.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(c) Any appointment made to Graduate Teacher/BT Assistant, after 29.07.2011, whether by direct recruitment or promotion from the post of Secondary Grade Teacher, or transfer, must necessarily possess TET.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(d) The Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service issued in GO (Ms.) No.13 School Education (S.E3(1)) Department dated 30.01.2020 insofar as it prescribes “a pass in Teacher Eligibility Test (TET)” only for direct recruitment for the post of BT Assistant and not for promotion thereto in Annexure-I (referred to in Rule 6) is struck down, thereby meaning that TET is mandatory/essential eligibility criterion for appointment to the post of BT Assistant even by promotion from Secondary Grade Teachers.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(e) The language employed in G.O. (Ms) No. 181 dated 15.11.2011 is to be read and understood to the effect that for continuance in service without promotional prospects, TET is not mandatory.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


75. The narration of facts which propelled this case would indicate that the teachers have not been appointed for the last ten years inspite of being qualified with a pass in TET. On the basis of the above findings and observations made, the State Government is directed to conduct TET periodically and make direct recruitment of teachers and promotion from among TET qualified candidates at the earliest.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

76. With these observations, Writ Petition Nos.3364 and 3368 of 2023 are allowed, Writ Appeal Nos. 313, 833, 1891, 2050, 2082, 2795 of 2022 & Writ Appeal Nos.19, 31, 32, 36 of 2023 are dismissed. WA.No.2617/2022 is allowed. No costs. Consequently, connected miscellaneous petitions are closed.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


71. மேற்கூறிய காரணங்களின்படி, சட்டம் தொடங்குவதற்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் கூட TET-ல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கற்றறிந்த நீதிபதியின் உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இடைநிலை  ஆசிரியர்கள் பதவியில் ஆண்டு ஊதிய உயர்வுகளுடன் தொடர வேண்டுவோர், இடைநிலை  ஆசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (B.T. உதவியாளர்) பதவி உயர்வு பெற விரும்புவோரில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவர்கள். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


72. மேற்கூறிய விளக்கத்தின் வெளிச்சத்தில், உண்மைப் பின்னணி, சட்டமன்றத்தின் நோக்கத்தை உச்சரிக்கும் சட்ட விதிகள் மற்றும் அதனடிப்படையிலான துணைச் சட்டத்தின் விளைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றத்தின் தவிர்க்க முடியாத முடிவு ஒவ்வொரு ஆசிரியரும் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் , BT உதவியாளர் விஷயத்தில் நேரடி ஆட்சேர்ப்பு அல்லது பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டாலும், RTE சட்டம் மற்றும் NCTE அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்த பிறகு, TETஇல் தேர்ச்சி பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சட்டம் மற்றும் அறிவிப்புகள் தொடங்குவதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறாமல் பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) பதவிக்கு பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள் என்ற கூற்றை ஏற்க முடியாது. இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் நேரடி ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) பட்டதாரி உதவியாளர்கள்/BT உதவியாளர்களில் நேரடி ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது பதவி உயர்வு மூலமாகவோ அல்லது இடமாற்றம் மூலமாகவோ எந்தவொரு புதிய நியமனங்களுக்கும், TET-ல் தேர்ச்சி பெறுவது அவசியம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகுதித் தகுதியாகும்.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


73. மேலும், 29.07.2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைவருக்கும், பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமல் இடைநிலை நிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) பிடி உதவியாளர் பதவியில் தொடரும் நோக்கத்திற்காக மட்டுமே TET தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. 29.07.2011க்குப் பிறகு நேரடி ஆட்சேர்ப்பு அல்லது பதவி உயர்வு அல்லது இடமாற்றம் மூலம் செய்யப்படும் எந்தவொரு நியமனமும், TET தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


முடிவுரை 

74. தெளிவு மற்றும் எளிமைக்காக, மேற்கண்ட விவாதத்தின் முடிவு பின்வருமாறு: https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(அ) ​​29.07.2011 க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர்/BT உதவியாளராக நியமிக்கப்பட்ட எந்த ஆசிரியரும், TET இல் தேர்ச்சி பெறாவிட்டாலும்/ பெறாவிட்டாலும், சேவையில் தொடர வேண்டும். அதே நேரத்தில், இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant)க்கு பதவி உயர்வு போன்ற எதிர்கால பதவி உயர்வு வாய்ப்புகளுக்காக மற்றும் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு போன்றவற்றுக்கு, அவர்களின் அசல் நியமன தேதிகளைப் பொருட்படுத்தாமல், அவர்கள் கட்டாயமாக TET பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(ஆ) 29.07.2011க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பதவிக்கு செய்யப்படும் எந்தவொரு நியமனமும் TET பெற்றிருக்க வேண்டும். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(இ) 29.07.2011க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) BT உதவியாளர் நியமனம், நேரடி ஆட்சேர்ப்பு அல்லது இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு அல்லது இடமாற்றம் மூலம், TET பெற்றிருக்க வேண்டும். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(ஈ) 30.01.2020 தேதியிட்ட அரசாணை (நிலை) எண்: 13 - G.O.(Ms.)No.13 பள்ளிக் கல்வி (S.E3(1)) துறையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகள் “ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.” பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) BT உதவியாளர் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்காக மட்டுமே மற்றும் இணைப்பு-I இல் (விதி 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளது) பதவி உயர்வுக்காக அல்ல. இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலம் கூட பட்டதாரி ஆசிரியர் (B.T. Assistant) நியமிக்க TET தேர்ச்சி பெற வேண்டும். https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html

(உ) 15.11.2011 தேதியிட்ட G.O. (Ms) எண். 181 இல் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் மூலம், பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமல் சேவையில் தொடர்வதற்கு, TET கட்டாயம் இல்லை என்பதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


75. TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதை இந்த வழக்கைத் தூண்டிய உண்மைகளின் விவரிப்பு சுட்டிக்காட்டுகிறது. மேற்கூறிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகளின் அடிப்படையில், மாநில அரசு TET-ஐ குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தி, ஆசிரியர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்து, TET தகுதி பெற்றவர்களிடமிருந்து பதவி உயர்வுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.html


76. இந்த அவதானிப்புகளுடன், 2023 இன் ரிட் மனு எண்.3364 மற்றும் 3368 அனுமதிக்கப்படுகிறது, ரிட் மேல்முறையீடு எண்கள் 313, 833, 1891, 2050, 2082, 2795 இன் 2022 & ரிட் மேல்முறையீடு எண்கள் 19,31,32,36 தள்ளுபடி செய்யப்பட்டன. WA.No.2617/2022 அனுமதிக்கப்படுகிறது. செலவுகள் இல்லை. இதன் விளைவாக, இணைக்கப்பட்ட இதர மனுக்கள் மூடப்பட்டன.https://kalvianjal.blogspot.com/2023/06/tet-writ-appeal-nos-313-833-1891-2050.htm






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் - 27.09.2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை (For All promotions including Primary School Headmaster, Middle School Headmaster, B.T. Assistant (Graduate Teacher), High School Headmaster must pass Teacher Eligibility Test - Candidates appointed before 27.09.2011 need not pass TET)...






 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் - 27.09.2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை (For All promotions including Primary School Headmaster, Middle School Headmaster, B.T. Assistant (Graduate Teacher), High School Headmaster must pass Teacher Eligibility Test - Candidates appointed before 27.09.2011 need not pass TET)...


2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்...


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது...


1. 27.09.2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை. Increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும். 27.09.2011க்குப் பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .


2. பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். 27.09.2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது. 27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும்.


3. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


4. தற்போது பணியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை. பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்...

முழு விவரம் விரைவில்...




கல்வியைப் பாதிக்கும் முட்டுக்கட்டையாக ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test as a stumbling block affecting Education)...

 

 கல்வியைப் பாதிக்கும் முட்டுக்கட்டையாக ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test as a stumbling block affecting Education)...


 முன்பொரு காலத்தில் மருத்துவமனைகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் சர்வ ரோக நிவாரணியாக தானா ஆனா மாத்திரை இருந்து வந்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனாலும் அது நோயுற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கியதோடு கேலியாகப் பேசுபடு பொருளாக இருந்தது என்பதும் மறக்க இயலாது. ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு தானா ஆனா மாத்திரை போன்று தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வை முன்மொழிவதும் கட்டாயமாக்குவதும் அதையொட்டிப் பதவி உயர்வு கலந்தாய்வு நடைமுறையை ஒத்திவைப்பதும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வே ஆசிரியருக்குரிய தகுதியான பொது மற்றும் தொழில் கல்வி தேர்ச்சி அடையாதோருக்காக முன்மொழியப்பட்ட ஒன்றாகும். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்திற்கும் முறையான கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இனச் சுழற்சி முறையில் நியாயமாக நடைபெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரோடு ஒத்து வாழ் என்னும் முதுமொழிக்கேற்ப ஏனைய மாநிலங்கள் செய்வதைப் பின்பற்றி 2012 க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது அறியத்தக்கதாகும். எனினும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம்போல் ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது நடத்தும் ஆசிரியர் போட்டித் தேர்வு மட்டும் வைத்து பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறை இல்லை. 


இச்சூழலில், ஓர் இடைநிலை ஆசிரியர் வெறும் பத்தாம்/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது பணியின் போது இறந்த ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு அரசு அளித்துள்ள கருணை அடிப்படையிலோ அலுவலக இளநிலை உதவியாளர் ஊதிய விகிதத்தில் பணி நியமனம் ஆக மேனிலைக்கல்வி இரண்டாம் ஆண்டுத் தேர்ச்சி அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்புத் தேர்ச்சி அதன் பிறகு ஆண்டிற்கு இரு முறை (இது முறையாக நடத்தபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி இறுதியாக, நியமனப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி நியமனம் பெறமுடியும் என்ற புதிய அறிவிப்பு வேறு.


அப்பப்பா! எத்தனைத் தேர்வுகள்! இத்தனைத் தேர்வுகள் இந்திய ஆட்சிக் குடிமைப்பணிகளில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்குக் கூட இருக்குமா என்பது ஐயமே. ஓர் குறைந்த ஊதியவிகிதத்திற்கு மூச்சைப் பிடித்துக் கொண்டு இத்தனைத் தடைதாண்டிய ஓட்டம் தேவையா என்பது மலைப்பாகத்தான் உள்ளது. அத்தனைத் தடைகளையும் தாண்டிய பிறகும் பணி நியமனங்கள் நடைபெற்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே! இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனங்கள் நடைபெற்று பத்தாண்டுகள் ஆகப் போகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பல்லாயிரம் பேர் அடுத்த போட்டிக்காகக் காத்துக் கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த நாட்டில் பணிக்கு வந்து விட்ட ஓர் ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தம் அடுத்தடுத்த பதவி உயர்வுகளுக்கு புதியதொரு போட்டித் தேர்வு அல்லது தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் அடைய முடியும் என்கிற நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற மற்றும் பணிநியமனப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெறவிருக்கும் இருபால் இடைநிலை ஆசிரியர்கள் அதன் பின்னர் தம் பணி மூப்பு மற்றும் உயர் கல்வித் தகுதி தேர்ச்சி ஆகிய போதிய தகுதிகள் இருந்தாலும் அடுத்தகட்ட பட்டதாரி ஆசிரியர் அல்லது தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுகளுக்கு மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது கொடுமையானது. இதோடு முடிந்துவிடவில்லை. முதல்கட்ட பதவி உயர்வு அடைந்தவர்கள் அதற்கடுத்த பதவி உயர்வுகளைப் பெற தகுதித் தேர்வு எழுத வேண்டிய நெருக்கடி நிலையுள்ளது.


இந்த நிலைமை வேறு பல்வேறு நிலைகளில் உள்ள உயர் அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சோதனை மேல் சோதனை என்பது ஆசிரியர் பெருமக்களுக்குத் தான் என்கிற போது, 'போங்கடா! நீங்களும் உங்கள் வேலையும்!' என்று தம் பணியை உதறிச் செல்கின்ற ஒரு நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வருகிறது. 


அறுபது வயதைக் கடந்து பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்கிற தற்போதைய நிலையில் பேசாமல் இந்தப் பாடு படுவதற்கு நிம்மதியாகக் கூலிவேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் தான் அண்மைக்காலத்தில் பணி செய்வதில் விருப்பமிருந்தாலும் இதுபோன்ற பணி நெருக்கடி மற்றும் பணிச்சுமை காரணமாக 'போதுமடா சாமி!' என்று வெறுப்பு மேலோங்க விருப்ப ஓய்வு கொடுத்துச் செல்லும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. இதை வெறுப்பு ஓய்வு என்று எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை எனலாம்.


இதுபோன்ற புறவயத் தேர்வுகளால் ஒரு நல்ல ஆசிரியரை ஒருபோதும் உருவாக்க முடியாது. ஆசிரியர் பணி என்பது அகவயப்பட்டதும் கூட. குழந்தை மற்றும் பதின்பருவத்தினர் உளவியல் சார்ந்த தக்க போதிய பாடக் கல்வித்தகுதிகள், நல்ல வகுப்பறைச் சூழல், பணியில் சுதந்திரம் மற்றும் நிம்மதி முதலானவை ஆசிரியர் பணிக்கு என்றும் இன்றியமையாதவையாகும். இதை எழுது; அதை எழுது என்று விரட்டிக் கொண்டே இருப்பது யாருக்கும் அழகல்ல. இதுபோல், இனி அனைத்துத் துறைகளிலும் அனைத்து வகையான பணி நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் உரிய கல்வித் தகுதிக்கு அப்பாற்பட்டு தகுதித் தேர்வு தேர்ச்சியைக் கட்டாயப்படுத்தினால் நிலைமை என்னவாகும்?


மேலும், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் இரு அவை உறுப்பினர்கள் ஆகியோரும் மக்களுக்கு உரிய உகந்த உன்னத பணிபுரிய ஒவ்வொரு நிலையிலும் அரசியல் தகுதித் தேர்வு தேர்ச்சிப் பெறுவது இன்றியமையாதது என்று வலியுறுத்துவது என்பது சமூக ஏற்புடையதாக அமையுமா? அல்லது நடைமுறை சாத்தியம் தான் படுமா? 


குறிப்பாக, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பவர் வெறும் பாட ஆசிரியர் மட்டும் அல்லர். அவர் அப்பள்ளியின் நிர்வாகத் தலைவரும் ஆவார். பள்ளி நிர்வாக மேலாண்மை, பணியாளர் ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் புரிதல், பள்ளி விதிகள் மற்றும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்துதல், உளவியல் சார்ந்த மாணவர் மற்றும் பெற்றோர் சிக்கல்கள், சமுதாயத் தொடர்பு, நேரம் மற்றும் நிதி நிர்வாகம் முதலானவற்றை அறிந்திருத்தலும் செயல்படுத்துதலும் இன்றியமையாதது. இதற்கு, அடிப்படைக் கல்வித்தகுதி சார்ந்த கற்பிக்கும் முதன்மைப் பாடங்கள் அடிப்படையிலான கொள்குறி வகைப் புறவயத்தேர்வும் கட்டாயத் தேர்ச்சியும் எந்த வகையிலும் பயனளிக்காது என்பது கண்கூடு. 


அதற்காக, ஆசிரியர் சமூகம் தேர்வைக் கண்டு அச்சம் கொள்கிறது என்று நினைப்பதற்கு இல்லை. பதவி உயர்வுகளுக்காகப் பலதரப்பட்ட கல்வித் தகுதிகளுடன் முனைவர் பட்டத்தையும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிநியமனத்திற்குரிய தேசிய மற்றும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளையும் துறைத் தேர்வுகளில் அடைவுப் பெற்று இருப்பினும் இன்னும் இடைநிலை ஆசிரியராகவே இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


இன்று ஆசிரியருக்குத் தகுதித் தேர்வு வேண்டும் என்று கூறுபவர்கள் யாவரும் ஒரு காலத்தில் குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதிகளுடன் மட்டுமே தேர்ச்சி பெற்றும்/ பெறாமலும் பணிபுரிந்த இடைநிலை/ இளநிலை ஆசிரியர்களிடம் கல்வியறிவு பெற்று உயர்ந்தவர்கள்தாம். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. முதுகலைப் பட்டமும் கல்வியியல் பட்டமும் பெறாதவர்களை அடையாளம் காண்பது என்பது இயலாதது. அதுபோல், பல்வேறு துறைத் தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெற்றும் காணப்படுகின்றனர். இதில் கூடுதல் சுமையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுதல் கட்டாயம் என்பது அமைகிறது. 


ஓர் ஆசிரியர் கல்வியால் உயர்வதும் அறிவால் மேம்படுவதும் பலவகையான திறன்களில் அடைவு பெறுவதும் தேவையான ஒன்று. அதற்கு குறைந்த விழுக்காடு தேர்ச்சி வாய்ப்பு உள்ள தகுதித் தேர்வும் அதை எதிர்கொள்ளும் திறமும் அதற்கான நேர காலமும் தோல்வியிலிருந்து மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பக்குவமும் காலம் கடந்த வயதும் நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளைக் கடந்து மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் அலுவலகம் சார்ந்த பணி நெருக்கடிகளும் வகுப்பறை சார்ந்த கற்பித்தல் சிக்கல்களும் சுய கற்றலுக்கான நேர ஒதுக்கீடுகளும் அதுகுறித்த சக பணியாளர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல்களும் அங்கலாய்ப்புகளும் மன வருத்தங்களும் மாணவர்கள் நலனைப் பாதிக்காது என்பதற்கு ஒரு உறுதிப்பாடும் கிடையாது. சாதாரண தேர்விற்கும் போட்டித் தேர்விற்கும் நிறைய வேறுபாடுகள் நிறைந்துள்ளன. 


அதீத உழைப்பும் நெடுநேர ஆழ்ந்த வாசிப்பும் போட்டித் தேர்வுகளுக்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். இதுவரையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அனைத்தும் போட்டித் தேர்வுகளை விட கடினமானதாகவே இருந்து வந்துள்ளன. இதை ஒவ்வொரு முறையும் தேர்ச்சி பெற்ற விழுக்காட்டினர் வழியாக அறிந்துணர முடியும். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அறிவிக்கபட்ட ஆண்டிலிருந்து ஒரே சீராக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடந்ததாகவும் வரலாறு இல்லை. அனைத்துத் துறை உயர் மற்றும் கடைநிலை அலுவலர்களுக்கும் இருக்கும் நியாயமான தொழிலாளர் நல சட்டத்திற்கு உட்பட்ட ஆசை போல தம் பதவி உயர்விற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டி தம் இல்லங்களிலும் வகுப்பறைகளிலும் மாணவர்கள் உள்ளங்களிலும் அவர்தம் பெற்றோர்கள் நம்பிக்கை எண்ணங்களிலும் இருந்து வழுவி, கற்பித்தலைத் துறந்து, முழுநேர புத்தகப் புழுக்களாக ஆக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதனால் கல்வி அடியோடு பாழ்படும்.


முடிவாக, போதுமான உரிய கல்வித் தகுதியும் ஏனைய எல்லா வகையான துறைகளிலும் கடைபிடிக்கப்படும் பணிமூப்பு முன்னுரிமையும் அடிப்படையில் ஏற்கனவே நடைமுறையில் பதவி உயர்வு பெறுவதற்கு இருந்து வரும் அடிப்படை தகுதிகளே போதுமானவை. அதை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதே சாலச்சிறந்தது. இது எளிய நடைமுறையும் கூட. இதன் காரணமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வில் துளியும் பாதிப்பு ஏற்படாது. குறிப்பாக, ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள சூழலை ஏற்படுத்திக் கொடுத்து சுதந்திரமாகப் பாடம் கற்பிக்க வழிவிடுங்கள். அதைவிடுத்து ஆளாளுக்கு ஏதேதோ பாடம் எடுக்க முயன்று கல்விக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்!


எழுத்தாளர் மணி கணேசன்


தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) எனும் குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)...


>>> தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) பெறுவதற்கான குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.


"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும். கொரியாவில் ஒரு அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் உடையவர்கள்தான் ஆசிரியர்கள்' என்று புகழாரம் சூட்டினார்.


ஆக ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ, அந்த சமுதாயம்தான் சிறந்த சமுதாயமாக இருக்கும், அந்த நாடுதான் வளர்ந்த நாடாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அத்தகைய ஆசிரியர் பணிக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், தகுதித் தேர்வில் தேறினால்தான் மட்டுமே முடியும் என்ற நடைமுறை இருக்கிறது. 2009ஆம் ஆண்டு இலவச கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெறவேண்டுமானால், அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.


தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அறிவிக்கைப்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக்கான 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பும், 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர்கள் பி.எட். பட்டப்படிப்பும் பெற்று இருக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்த தேர்வுகளை எழுதியவர்களில், முதல் தாள் தேர்வில் 14 சதவீதம் பேரும், 2-ம் தாள் தேர்வில் 6 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு பெறாத நிலையில் என்ன செய்வோம்? என்று அந்த ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆசிரியர்களை பொறுத்தமட்டில், இந்த தகுதித் தேர்வு தேவையே இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஆசிரியர் கல்வியில் சேரும்போதே, பிளஸ்-2 அல்லது பட்டப்படிப்பு தேர்வுகளில் வெற்றி பெற்று, ஆசிரியர் கல்வியிலும் சேர்ந்து, அதிலும் பட்டயப்படிப்பு தேர்வு அல்லது பட்டப்படிப்பு தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் அரசு பள்ளிக்கூட பணியில் சேர வேண்டுமென்றால், மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இவ்வளவு தேர்வுகளை எழுதி தேர்வு பெறும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். எனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேவையே இல்லை என்ற கொள்கை முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுத்து தகுதித் தேர்வுக்கு 'டாட்டா' சொல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்கள் கருத்தாக இருக்கிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கக் கல்வித் துறை - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 482/ ஆ3/ 2023, நாள்: 17-04-2023 (Elementary Education Department - Passing Teacher Eligibility Test (TET) is mandatory for promotion to B.T. Assistant (Graduate Teacher) - Aranthangi District Educational Officer (Elementary Education) Proceedings RC.No: 482/ A3/ 2023, Dated: 17-04-2023)...

 

>>> தொடக்கக் கல்வித் துறை  - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) கட்டாயம் - அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 482/ ஆ3/ 2023, நாள்: 17-04-2023 (Elementary Education Department - Passing Teacher Eligibility Test (TET) is mandatory for promotion to B.T. Assistant (Graduate Teacher) - Aranthangi District Educational Officer (Elementary Education) Proceedings RC.No: 482/ A3/ 2023, Dated: 17-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...