கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா 2வது அலை... மீண்டும் ஒரு சவால் - ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்துங்கள் - பிரதமர் மோடி...



நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 11 முதல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைநாடு முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமெடுத்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றார்.மாநில முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாம் முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை எதிர்கொண்டோம் இப்போது தடுப்பூசி உள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகிறதுகொரோனா முதல் அலையை கடந்து விட்டோம் இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தை பயன்படுத்துங்கள் என்றார். இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது கட்டுப்பாடு அவசியம். பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் தளர்வடைந்து விட்டது. கொரோனா பரவலை தடுக்க கண்டறிதல் என்பது சிறந்த வழியாக இருக்கும் என்று கூறிய மோடி, 70 சதவிகிதம் ஆர் பிசிஆர் பரிசோதனை என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றார்.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகள் பற்றி விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும் என்றும் கூறினார். ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நாம் வெல்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.'!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns