கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (10-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 10, 2021



உத்தியோகத்தில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் கவனமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேலோங்கும். வீட்டிற்காக ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : நம்பிக்கை மேலோங்கும்.


கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

மே 10, 2021



தங்களுக்கு ஏற்படும் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி கொள்வீர்கள். சுயதொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

மே 10, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும். 

---------------------------------------




கடகம்

மே 10, 2021



பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மற்றும் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 


பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஈடுபாடு ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

மே 10, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரம் : மாற்றங்கள் ஏற்படும். 


உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

மே 10, 2021



தொழில் தொடர்பான செயல்பாடுகளால் தூக்கமின்மை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய பணிகள் நிறைவேற காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : காலதாமதம் உண்டாகும். 


சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




துலாம்

மே 10, 2021



வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். மறைவாக இருந்த சில பொருட்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். பழமை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : நிதானம் வேண்டும். 

---------------------------------------




விருச்சகம்

மே 10, 2021



உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



விசாகம் : புரிதல் ஏற்படும். 


அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள். 


கேட்டை : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------




தனுசு

மே 10, 2021



வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியான சூழல் உண்டாகும். புத்திரர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மாமன், மைத்துனர்களிடம் பேச்சுவார்த்தையின்போது கவனத்துடன் செயல்படவும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் 



மூலம் : நிம்மதி உண்டாகும். 


பூராடம் : அனுகூலமான நாள். 


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

மே 10, 2021



வெளியூர் வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சில உண்மைகளை அறிந்து கொள்வீர்கள். தொழில் தொடர்பான எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும். 


திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும். 


அவிட்டம் : உண்மைகளை அறிவீர்கள்.

---------------------------------------




கும்பம்

மே 10, 2021



சகோதரர்களுக்காக சில செயல்களை செய்து மனம் மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள். 


சதயம் : காரியசித்தி உண்டாகும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------




மீனம்

மே 10, 2021



கௌரவப் பதவிகளின் மூலம் பிரபலம் அடைவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சொந்தமாக மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.


உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.


ரேவதி : தேவைகள் பூர்த்தியாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...