கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.05.2021(செவ்வாய்)...

 


🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.

நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.

அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!

🌹🌹தொந்தரவு செய்யும் அன்பு ஒருபோதும் பொய்யாக இருக்காது.

ஆனால் அதுதான் யாருக்கும் புரிவது இல்லை.!!

🌹🌹🌹வேஷம் போடும் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது.

மதி கெட்ட மனதுக்குத் தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேஷம் என்று.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀 நம் நெஞ்சில் வாழும் பாவலர் ஐயா அவர்களுக்கு எதிர்வரும் 14.05.2021அன்று முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு 

மாவட்ட,மாநகர,நகர,ஒன்றிய,சரக மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தி புகழ் வணக்கம் செலுத்திடுமாறும் சக்திக்கு ஏற்ற வகையினில் நலத்திட்ட உதவிப் பொருள்களை கொரோனா தடுப்பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் இனக்காவலர்,

பாவலர் ஐயா அவர்களின் நோக்கம்- இலட்சியம் நெஞ்சினில் தாங்கிப் பயணிப்போம்!

கொரோனாக் காலத்திய ஊரடங்கு விதிகளை 

கவனத்தில் -கணக்கில் கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  கடைப்பிடிப்போம்!

வாழ்க !

பாவலர் புகழ்!

🌹👉தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரணநிதிக்கு 2021 மே மாதம் ஊதியத்தில் இருந்து  குறைந்தபட்சமாக ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவது என்று முடிவெடுத்து அறிவிக்கிறது-

முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் பொதுச்செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

🎀🎀பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்

👉மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

👉முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை

👉நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

🎀🎀ஜேக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - பத்திரிக்கைச் செய்தி 10.05.2021

🎀🎀G.O.(Ms) No.19 - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.



🎀🎀பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும்

பிப்ரவரியில் நடைபெற்ற நவ., டிச. 2020 பருவத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் புகார்.

புகார் எதிரொலியாக பிப்ரவரி 2021 ல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு

தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படும் - தமிழக அரசு

ஆன்லைன் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் எனவும் அறிவிப்பு.

🎀🎀மாணவர்களின் நலன் தான் முக்கியம்

12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது தற்போது சாதரணமாக விஷயம் அல்ல.

தேர்வை விட மாணவர்களின் நலன் முக்கியம்.

முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்வு நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என தெரிவிக்கப்படும்

அமைச்சர் அன்பில் மகேஷ்

🎀🎀கிராமப்புறங்களில் உள்ள மாணவியருக்கு ஊட்டச்சத்து, அயோடின், வைட்டமின் ஏ குறைபாடு அதிகரித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் 9 - 12 வரை பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் கால ஆரோக்கியம் & மேலாண்மைத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த CEO-க்களுக்கு கல்வித்துறை உத்தரவு.

🎀🎀தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பதில் மட்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் விரிவான விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என பள்ளிக் கல்வி துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🎀🎀தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை 

🎀🎀மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அறிவிப்பு.  54 வகையான முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 30 வரை www.mkuniversity.ac.in இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

🎀🎀கல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என  கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு.

🎀🎀கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழு கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என AICTE கூறியுள்ளது.

🎀🎀தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கரோனா நோயாளிகளுக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation).

🎀🎀RTI - இடைநிலை ஆசிரியர் ரூ.2000 தனி ஊதியம் D.A, Annual Increment, EL Surrender, ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற  அரசாணையின் நகலை வழங்க கோரி RTI கடிதம் அனுப்பபட்டதற்கு   அதற்கான பதிலில்  கருவூல ஆணையரிடம் இருந்து தனியர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில் இல்லை என்று பதில்  அளிக்கப்பட்டுள்ளது. 

🎀🎀கணினி அறிவியல் பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கணினி அறிவியல் பிஎட் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

🎀🎀முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்‌19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க அரசாணை வெளியீடு.

🎀🎀தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

👉தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் மே 31ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

🎀🎀தமிழக அரசின் தலைமைச் வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

🎀🎀கொரோனா நிவாரண நிதி தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்க நடவடிக்கை..

திரு. ஐ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர்

🎀🎀புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் இன்று பதவியேற்பர்

👉புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக சபாநாயகராக செயல்படுவேன்.

👉எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

👉முதல்வரை தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் அகரவரிசைப்படி இன்று பதவியேற்பர்

👉கொரொனா  பாதிப்புக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர்கள் உடல்நலம் தேறியபின் பதவி ஏற்றுக் கொள்ளலாம்

தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி

🎀🎀அதிமுக வை சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்,

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் 

இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தனர்.

🎀🎀புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது.

-சென்னை உயர் நீதிமன்றம்.

🎀🎀தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.

🎀🎀இந்தியாவில் அதிகரித்து வரும் நோய் தொற்றுக்கு உருமாறிய வைரஸ் காரணமல்ல..

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் போனதும் முகக் கவசம் அணியாமல் போனதும்தான் காரணம்.

உலக சுகாதார அமைப்பு

🎀🎀கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவி பெற்றுள்ளது மத்திய அரசு

மத்திய அரசு தனது பணியை ஒழுங்காக செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது

ராகுல்காந்தி

🎀🎀கொரோனா நிவாரணம் ரூ.2000/-வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

🎀🎀தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக அப்பாவு &  துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.

சபாநாயகர் பதவிக்கு அப்பாவு & துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி மனு தாக்கல் செய்ய உள்ளனர்

போட்டியின்றி நாளை காலை 10 மணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

🎀🎀ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது.

வாகனத்தை கைப்பற்றினால் சிறிது நேரத்தில் விடுவிக்க வேண்டும்: 

டிஜிபி

🎀🎀சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் பணியிட மாற்றம்.

புதிய ஆணையராகக் ககன்தீப் சிங் பேடி நியமனம்.

🎀🎀தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

சென்னையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிவிப்பு.

🎀🎀மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54 வகையான PG, PG Diploma, Certificate படிப்புகளில் சேர இன்று முதல் ஜூன் 30 வரை mkuniversity.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா அறிவிப்பு.

🎀🎀முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்க்கு சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

🎀🎀ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டி:  இங்கிலாந்து செல்லும்  இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என பிசிசிஐ தகவல்.

🎀🎀கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேச்சு - தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

🎀🎀தமிழகத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து நூலகங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்பட்டு, அடுத்த தலைமுறை இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் 

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

🎀🎀கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு; லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சித்த மருத்துவ மையத்துக்கு அனுப்பப்படுவர்

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

🎀🎀கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தைக் கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை

நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும்

திமுகவினர் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத்  தீர்வு காண முயல வேண்டும்

-மு.க. ஸ்டாலின் 

🎀🎀தமிழகத்தில் கொரோன பரவல் கட்டுப்படுத்தவும்- கண்கானிக்கவும் WarRoom அமைப்பு, அதிகாரிகள் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

🎀🎀முழு ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும்.

ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

- அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

🎀🎀கடந்த 3 மாதங்களில் 93 நாடுகளுக்கு 6.5 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இதில், 60% நாடுகள் கொரோனா பெரும்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன.

- டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

🎀🎀முன் அனுமதியின்றி ஊடகத்தினரிடம் பேசக்கூடாது.                     - கட்சி நிர்வாகிகளுக்கு மக்கள் நீதி மய்யம் உத்தரவு 

🎀🎀கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி பரவலை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

🎀🎀தென் கொரியாவில் இருந்து முதல் தொகுப்பு மருத்துவ பொருட்கள் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தது.

230 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை வந்தடைந்துள்ளது.

🎀🎀முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு கூடுதலாக 7.55 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைத்தது மத்திய அரசு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...