கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திறக்க முடியாத பூட்டே கிடையாது, தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் (இன்று ஒரு சிறு கதை)...

 



எல்லாமே நம்மால் முடியும்; சிந்தனையில் தெளிவும், கூர்மையும் இருந்தால்...

திறக்க முடியாத பூட்டே கிடையாது, தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்...

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் நீர் பாய்ச்சும்  வேளையில் தொலைத்து விட்டார்.

அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு பரிசளித்த கைகடிகாரம்.

அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்து விட்டார், அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,

அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான். விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.

அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,

எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

பதட்டப்படாமல், அமைதியாக சிந்தித்தால், எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டு.

திறக்கப்படாத பூட்டே கிடையாது. தகுந்த சாவியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...