TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை
* சிறுபான்மை பள்ளிகளுக்கு , கட்டாயக் கல்வி சட்டம் பொருந்தாது என 2014ல் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பரமத்தி எஜுகேசனல் சொசைட்டி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வலியுறுத்தி இதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஒரு பிரிவாக உள்ள தகுதித் தேர்வும் சிறுபான்மை பள்ளிகளுக்கும் தேவையற்றதாகிவிட்டது.
* இதனைத் தொடர்ந்து 02.06.2023-ல், சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய மிக நீண்ட ,விரிவான தீர்ப்பில் பக்கம் 128 - ல் para 71 -ல் உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
* இந்த தீர்ப்பை எதிர்த்துத்தான் உச்சநீதிமன்றத்தில் இவ்வளவு காலமாக வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுபெற தகுதித் தேர்வு தேவையில்லை என்றும், ஆனால் சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
* இந்த மேல்முறையீட்டில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்ச்சி தேவை என்ற மேல் முறையீட்டை 19.02.2025 தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில்
* கடந்த 01.09.2025 அன்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் , ஆசிரியப் பணியில் 55 வயதைத் தாண்டியவர்கள் தவிர மற்ற அனைவரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் சிறுபான்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரை , ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின்மீது , 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு ஏதும் வழங்க வாய்ப்பு இல்லாததால், அதன் மீது தீர்ப்பு ஏதும் வழங்காமல் , சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு, ஏற்கனவே 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
* இதன் மீது உச்சநீதிமன்ற நீதிபதி எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேறு வழக்கும் பதிவு செய்யப்படவும் இல்லை.
* எனவே தற்போது சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அறிவிப்போ அல்லது எவ்வித வழக்கோ நிலுவையில் இல்லை.
* ஆகவே, 01.09.2025 அன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.