கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய தேசிய கல்வி கொள்கை, இயக்குனர் பதவி ஒழிப்பு - பள்ளிக் கல்வியில் ஜெயிப்பாரா உதயச்சந்திரன்?

 


புதிய தேசிய கல்வி கொள்கை, இயக்குனர் பதவி ஒழிப்பு - பள்ளிக் கல்வியில் ஜெயிப்பாரா உதயச்சந்திரன்? - குமுதம் ரிப்போர்ட்டர்...


புதிய தேசிய கல்வி கொள்கை ஆலோசனைக் கூட்ட புறக்கணிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ஒழிப்பு என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் அதிரடி நடவடிக்கையால் கல்வித்துறை வட்டாரம் கலகலத்து நிற்கிறது. 




 இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் இடம் பேசினோம் .




பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவி அதிகாரம் சார்ந்த பணி அல்ல. ஆசிரியர் அனுபவம், மாணவர்களின் மனநிலை ஆகிய அனுபவங்களைப் பெற்று பணியாற்றக்கூடிய பதவி கடந்த அதிமுக ஆட்சியில் ஐஏஎஸ் தலைமையிலான பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டது 




திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்துச் செய்யப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை நீக்கிவிட்டு பள்ளிக்கல்வி ஆணையரிடம் எல்லா அதிகாரங்களையும் தாரைவார்க்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் என்ற ஐஎஎஸ் இருக்கிறார்.




பிறகு எதற்கு தனியாக பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவாக்கி தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் இந்த விஷயம் ஆசிரியரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.




பொதுப் பள்ளிக்கான மாநில மேடை யின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு


2019ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பணியிடம் உருவானது மே பள்ளிக்கல்வி ஆணையர் இயக்குனர் என்ற இரு அதிகார மையங்கள் வேண்டாம் என்றும் திமுக ஆட்சியில் ஆணையர் பதவி நீக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ஒழித்துவிட்டு அந்த இடத்துக்கு பள்ளிக்கல்வி ஆணையர் என்ற ஐஐஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கல்விப்பணியில் அனுபவம் அனுபவம் உள்ளவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகி உள்ளனர். எதிர்காலத்தில் வடநாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை தமிழக பள்ளிக்கல்வி ஆணையராக நியமிக்கும் போது அவருக்கு தமிழக பள்ளிகளில் தரம் மற்றும் ஆசிரியர்களிடம் நிலை தெரியாது. அப்போது அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.




உதயச்சந்திரன் ஐஏஎஸ்

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை செயலாளராக இருந்தவர். அதனால் பள்ளிக் கல்வித் துறையில் எல்லா விஷயங்களும் அவருக்கு அத்துப்படி.



 பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ஒழித்துவிட்டு பள்ளிகளில் கல்வி ஆணையராக மே 14ஆம் தேதி நந்தகுமார் பதவியேற்றார். பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் தற்போது தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார். 



>>> குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் செய்தி...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns