கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெற்றி பெற நினைப்பவர்கள் ஊக்கத்தை தகர்க்கும் சொற்களை கவனிக்கக்கூடாது (இன்று ஒரு சிறு கதை)...



 "வெற்றி"


ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.


யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.


நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.


கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.


“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.


இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன. *“உயரத்தை அடையும் போது நமக்கு உயிர் இருக்காது”* என்று கத்தின.


ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.


கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.


“தற்கொலை முயற்சிடா ”


எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.


எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.


அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.


*“அவனுக்கு காது கேட்காது”.*


*நாமும் சில நேரங்களில் இப்படி தான் இருக்க வேண்டும்.*


*வெற்றி பெற நினைப்பவர்கள் ஊக்கத்தை தகர்க்கும் சொற்களை காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.*


நம்மை சிதைக்க எப்பேர்ப்பட்ட மோசமான கருத்துக்கள் கூறப்பட்டாலும் நாம் எதையும் பொருட்படுத்தக் கூடாது.


*முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.🤝


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...