கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு...

 வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு...


ONLINE: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பெற்றோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!


இந்தியாவில் CORONA  பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ONLINE  வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ONLINE  கல்வியில் பெற்றோர்களுக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு March  மாதம் முதல் CORONA  நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ONLINE  வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் ONLINE  கல்வியில், அவர்களது பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதாவது ONLINE  கல்வியில் மாணவர்களின் பெற்றோர்களின் பங்கு குறித்த வழிகாட்டுதல்களை அந்தந்த மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாநில கல்வித்துறைக்கும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடு தான் முதல் பள்ளி. பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்.


அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ONLINE  கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறை(POSITIVE)யான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழி நடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...