கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 15, 2021



தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அஸ்வினி : ஆசிகள் கிடைக்கும்.


பரணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 15, 2021



திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 15, 2021



கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் உண்டாகும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மனை விருத்திக்கான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.


திருவாதிரை : சிக்கல்கள் நீங்கும்.


புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 15, 2021



உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


பூசம் : அறிமுகம் உண்டாகும்.


ஆயில்யம் : தடைகள் அகலும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 15, 2021



நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள். குடும்ப பொருளாதாரம் மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : பொருளாதாரம் மேம்படும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 15, 2021



உத்தியோகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். பயணங்களால் லாபம் அதிகரிக்கும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 15, 2021



கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் தனலாபம் ஏற்படும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : கீர்த்தி உண்டாகும்.


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


விசாகம் : தேடல் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 15, 2021



சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் உதவிகளால் நற்செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : முன்னேற்றமான நாள்


அனுஷம் : லாபம் உண்டாகும்.


கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 15, 2021



அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழிலில் சக பணியாளர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : தடைகள் அகலும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : நன்மதிப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 15, 2021



வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். தொழிலை  அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 15, 2021



பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. செய்யும் செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 15, 2021



குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனை விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : சாதகமான நாள்.


உத்திரட்டாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.


ரேவதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...