கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG வகுப்பு சேர்க்கை - விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு...

 


தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச எல்.கே.ஜி.வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதற்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம்.


2020-21 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.


இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் மாணவர் சேர்க்கை வரை அனைத்து விதமான செயல்பாடுகளும் பெற்றோர் அறியும் வகையில் கல்வி இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025

கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளி...