கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் – படம் மாற்றுவது எப்படி? இதை வீட்டில் இருந்து நீங்களே செய்யலாம்...



திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்.


தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழ்நாடு அரசு விரைவில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவர் ஆணாக இருந்தால் பெண்ணை குடும்பத் தலைவியாக மாற்றுவதற்கு மாற்ற விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அதனால், தமிழ்நாடு அரசின்பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் ரேஷன் அட்டையில் புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பதற்கு, முகவரி மாற்றம் செய்வதற்கு, குடும்பத் தலைவர் பெயர் மற்றும் படம் மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம் செய்வதற்கு, குடும்ப அட்டையை ஒப்படைப்பதற்கு / குடும்ப அட்டையை ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவைகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.


அந்த வகையில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயரை மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்.


ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், குடும்ப தலைவர் மாற்றம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


இதையடுத்து, உங்களுடைய ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் நம்பரை உள்ளீடு செய்து Captcha குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.


இதற்கு அடுத்து, நீங்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு ஒரு OTP (One Time Password) எண் வரும். அதை பதிவு செய்தால், உங்களுடைய பக்கம் login ஆகி உள்ளே செல்வீர்கள்.


இதைத் தொடர்து, அதில் குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். அதில் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களில் யாரை குடும்பத் தலைவராக அல்லது குடும்பத் தலைவியாக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர், குடும்ப தலைவராக அல்லது குடும்பத் தலைவியாக மாற்றப்படுபவரின் பெயருக்கு நேராக உள்ள பாக்ஸில் Tick செய்ய வேண்டும்.


இதைத் தொடர்ந்து, நீங்கள் குடும்ப தலைவராக மாற்றம் செய்ய விரும்புபவருடைய அதாவது அதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ம் செய்ய வேண்டும். மேலும், அவர்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை 1 MB அளவுக்குள் புகைப்படம் என்று இருக்கும் Boxல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


நீங்கள் அளித்த தகவல் சரியாக இருந்தால், உங்களுடைய கோரிக்கை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான தகவல் வரும். நீங்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை Save செய்து வைத்து கொள்ள வேண்டும்.


பிறகு, உங்களுடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முகப்பு பக்கத்தில் சென்று ரேஷன் அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கிளிக் செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவ்வளவுதான். ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்யும் முறை. இதை வீட்டில் இருந்து நீங்களே செய்யலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns