கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குடும்ப அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடும்ப அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று (09-12-2023) ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன (Today (09-12-2023) Ration Card Grievance Redressal Camps are being held)...


இன்று (09-12-2023) ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன (Today (09-12-2023) Ration Card Grievance Redressal Camps are being held)...


ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் வருகின்ற சனிக்கிழமை (09.12.23) அன்று காலை 10  மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்...


ரேஷன் கார்டு


1. பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல்

2. முகவரி மாற்றம்

3. புதிய அலைபேசி எண் சேர்த்தல் அல்லது பழைய அலைபேசி எண் மாற்றம்

4. குடும்பத் தலைவர் மாற்றம் - 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை குடும்ப தலைவராக நியமிக்க முடியாது

5. தற்போது இருக்கும் முகவரி மாற்றம் செய்யாமலே தங்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடையை மற்றும் மாற்றம் செய்தல்

6. அரசி (NPHH) அட்டையை சர்க்கரை அட்டையாக (NPHH-S) மாற்றம் செய்தல்

7. தொலைந்து போன பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு  நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தல்

8. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல்

9.உரிமம் வழங்குதல் அதாவது ஒருவர் ரேஷன் கடைக்கு செல்ல இயலாத (வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோய்வாய் பட்டவர்கள்) சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அவரது பொருட்களை பெறுவது.. அதாவது அங்கீகார சான்று பெறுதல். . 

10. ரேஷன் கார்டை ரத்து செய்தல் ( ஒருவேளை வேறு மாநிலங்களில் குடியேறி இருந்தால்) 

11. ஒரு நபர் இருக்கும் ரேஷன் கார்டை அவர் விருப்பப்படும் பட்சத்தில் மட்டும் மற்ற குடும்ப உறுப்பினர்கள பெயர் இருக்கும் ரேசன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம். . . 


*தேவைப்படும் ஆவணங்கள்


1. ஆதார் அட்டை நகல் குழந்தைகளாக இருந்தால் பிறப்புச் சான்றிதழ் அவசியம்

2. முகவரி மாற்றம் செய்வதற்கு கேஸ் பில் வங்கி கணக்கு புத்தகம் மின் இணைப்பு ரசீது இதில் ஏதாவது ஒன்று ஒரிஜினல் கொண்டு வர வேண்டும்

3. பெயர் நீக்கம் செய்வதற்கு இறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் கட்டாயம் தேவை

4. மாற்றம் செய்யும் அலைபேசி எண்ணை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்


சர்க்கரை ஆட்டையை  (NPHH-S) அரிசி (NPHH) அட்டையாக இப்போது மாற்றம் செய்ய முடியாது அதேபோல் NPHH கார்டை PHH கார்டாகவும் மாற்றம் செய்ய முடியாது இதைப் பற்றிய தெளிவான தகவல் வரும் மார்ச் மாதம் வெளியாகும்.



பொது விநியோகத் திட்டம் - ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் (One Nation One Ration Card Scheme) - அமல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 11-04-2023 (Letter from Registrar of Co-operative Societies regarding implementation of Public Distribution Scheme – One Nation One Ration Card Scheme – Dated: 11-04-2023)...

 


>>> பொது விநியோகத் திட்டம் - ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் (One Nation One Ration Card Scheme) - அமல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 11-04-2023 (Letter from Registrar of Co-operative Societies regarding implementation of Public Distribution Scheme – One Nation One Ration Card Scheme – Dated: 11-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...



 ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...


பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் முகாம் குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று சனிக்கிழமையில் நடக்கிறது இந்த முகாம் காலை 10 மணி முதல் 1-மணி வரை நடைபெறும்.


இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் மற்றும் இதர குறைபாடுகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவரிடம் வழங்கி தீர்வு பெறலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு...



 நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.


கால அவகாசம் நீட்டிப்பு: 

நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பலனடையும் ஒருவர் இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது. 


அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர்.


இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவித்துள்ளார். மேலும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020ல் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ.3,993.80 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் – படம் மாற்றுவது எப்படி? இதை வீட்டில் இருந்து நீங்களே செய்யலாம்...



திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார்.


தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழ்நாடு அரசு விரைவில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவர் ஆணாக இருந்தால் பெண்ணை குடும்பத் தலைவியாக மாற்றுவதற்கு மாற்ற விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


அதனால், தமிழ்நாடு அரசின்பொது விநியோகத் திட்டத்தின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் ரேஷன் அட்டையில் புதிய குடும்ப உறுப்பினரை சேர்ப்பதற்கு, முகவரி மாற்றம் செய்வதற்கு, குடும்பத் தலைவர் பெயர் மற்றும் படம் மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம் செய்வதற்கு, குடும்ப அட்டையை ஒப்படைப்பதற்கு / குடும்ப அட்டையை ரத்து செய்ய, அட்டை தொடர்பான சேவைகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.


அந்த வகையில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயரை மாற்றுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்.


ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், குடும்ப தலைவர் மாற்றம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


இதையடுத்து, உங்களுடைய ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் நம்பரை உள்ளீடு செய்து Captcha குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.


இதற்கு அடுத்து, நீங்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு ஒரு OTP (One Time Password) எண் வரும். அதை பதிவு செய்தால், உங்களுடைய பக்கம் login ஆகி உள்ளே செல்வீர்கள்.


இதைத் தொடர்து, அதில் குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். அதில் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களில் யாரை குடும்பத் தலைவராக அல்லது குடும்பத் தலைவியாக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர், குடும்ப தலைவராக அல்லது குடும்பத் தலைவியாக மாற்றப்படுபவரின் பெயருக்கு நேராக உள்ள பாக்ஸில் Tick செய்ய வேண்டும்.


இதைத் தொடர்ந்து, நீங்கள் குடும்ப தலைவராக மாற்றம் செய்ய விரும்புபவருடைய அதாவது அதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றை பதிவேற்ம் செய்ய வேண்டும். மேலும், அவர்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை 1 MB அளவுக்குள் புகைப்படம் என்று இருக்கும் Boxல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


நீங்கள் அளித்த தகவல் சரியாக இருந்தால், உங்களுடைய கோரிக்கை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான தகவல் வரும். நீங்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை Save செய்து வைத்து கொள்ள வேண்டும்.


பிறகு, உங்களுடைய ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முகப்பு பக்கத்தில் சென்று ரேஷன் அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கிளிக் செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவ்வளவுதான். ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்யும் முறை. இதை வீட்டில் இருந்து நீங்களே செய்யலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு மாதங்களுக்கு கூடுதல் அரிசி வழங்க உத்தரவு...



 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி வழங்க உத்தரவு.


கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மே, ஜூன் மாதத்தில் ஏற்கனவே வழங்கப்படும் அளவுடன் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


புதிய ரேஷன் கார்டு 20 ரூபாய் கட்டணத்தில் எளிய முறையில் பெற தமிழக அரசு புதிய ஏற்பாடு...

 தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் அட்டை, ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள், பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்வதற்கும் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.



அதன்படி புதிய ரேஷன் அட்டைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், ரேஷன் அட்டைகளில் ஏதாவது திருத்தம் செய்ய விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த இணையதள முகவரியில் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்த பின் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...