கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நியாயவிலைக் கடைகளில்(Ration Shop) பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவம்(Authorization Format)...



 ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவத்தை, உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கடைக்கு செல்ல முடியாத நிலையில், தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.


இதற்கு, கார்டுதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை ஊழியர்கள் பணத்திற்கு விற்பதாகவும், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் தர தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுகின்றன.


உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், அதற்கான அங்கீகார சான்று ஒப்புதல் படிவத்தை, 'www.tnpds.gov.in' என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை உரிய முறையில் சரிபார்த்து, விரைந்து ஒப்புதல் தர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


>>> அங்கீகார சான்று ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns