2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர்,
பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
◆பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
◆865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்.
◆தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
◆2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக இருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது.
◆கற்றல் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
◆ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மேம்படுத்துதல், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
◆ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தரவுகளை கண்காணிக்க, 433 கல்வி ஒன்றியங்களுக்கு ஆசிரியர்களுக்கு 40 டேப்லட் வழங்கப்படும்.
◆8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை பெற உறுதி செய்யும்பொருட்டு ரூ. 66 கோடி செலவில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ கொண்டு வரப்படும்.
>>> தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்(Budget) முக்கிய அம்சங்கள்...