கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்(Pension Rules - Changes) - மத்திய அரசு அறிவிப்பு...

 பென்சன் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் மாற்றுத்திறனாளி பிள்ளை அல்லது உடன்பிறந்தவரும் இனி குடும்ப பென்சன் பெற தகுதியானவர் என அரசு தெரிவித்துள்ளது.



எனினும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன்பிறந்தவரின் மாத வருமானம், குடும்பப் பென்சனைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பப் பென்சன் பெற முடியும்.



இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்துபோன மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் பிள்ளை/உடன்பிறந்தவர் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் குடும்பப் பென்சன் பெற தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளது



மேலும், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனம் அவர் வாழ்வாதாரம் பெற தடையாக இருந்தால் மட்டுமே குடும்பப் பென்சன் பெற முடியும் என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வருமான வரம்புகளை தாராளமாக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


D/o Pension & Pensioners' Welfare , GoI


@DOPPW_India


A disabled child/sibling of a Goverment servant or pensioner will be eligible for  family pension,if his income is less than the entitled family pension i.e. 30% of the last pay drawn plus DR. Earlier the income ceiling was Rs 9000/- per month plus DR. @DrJitendraSingh


6:55 PM · Aug 8, 2021 from New Delhi, India



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...