கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசனைக் கூட்ட முடிவுகள்...


 CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை , உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 18.09.2021 ( சனிக்கிழமை ) காலை 10.00 மணிக்கு துவங்கி 3.00 மணி வரை நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் CPS திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



அரசுஊழியர்களின் துறைவாரிச் சங்கத் தலைவர்கள் , ஆசிரியர் அமைப்புக்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் கல்லூரிப் பேராசியர் அமைப்பைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர். 




ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வகுமார் , சு.ஜெயராஜராஜேஸ்வரன் , பி.பிரெடரிக் எங்கெல்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் : 




தமிழகத்தில் புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 18 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையினைப் பெற்ற முந்தைய அரசு அதைப் பற்றி ஏதுவும் பேசாமல் இருந்து விட்டனர். இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையிலான திமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததன் அடிப்படையில் அனைத்து அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் திமுக ஆட்சி மலர்ந்தால் நமக்கான விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வாக்களித்தனர். 




நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என்றாலும் , ஓய்வூதிய மானியக் கோரிக்கையில் CPS- நிதியை எவ்வாறு முதலீடு செய்யப்பட்ட வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கான நீண்ட தாமதம் பணியாளர்களுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் நிதி பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது எனவும் , அதே நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிர்மறை வட்டி சுமையின் காரணமாக ஆண்டொன்றுக்கு ரூ .1200 / - கோடிக்கும் அதிகமாக கூடுதல் நிதிச் செலவு ஏற்பட்டு வருவதாகவும் , எனவே மத்திய தணிக்கை குழு அறிக்கையில் குறப்பிட்டுள்ளதன் அடிப்படையிலும் , வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் மீது விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக அரசின் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் எங்களது ஆட்சிகாலம் முடிவதற்குள் எங்களது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளது நம்பிகையளிக்கிறது. இருந்தபோதும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி CPS- யை இரத்து செய்யக் கோரி கீழ்க்காணும் தொடர் இயக்கங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.


>>> CPS ஒழிப்பு இயக்கம் - பத்திரிகை செய்தி...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...