கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.21

 திருக்குறள் :


அதிகாரம்: அறிவுடைமை 


குறள் : 430


அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்.


பொருள்:

அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.


பழமொழி :

After dinner sit a while



உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு



இரண்டொழுக்க பண்புகள் :


1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.



2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.


பொன்மொழி :


நாம் அளவுக்கு மீறிய ஆசையால் தூண்டப்படுகிறோம். தூண்டப்பட்டதனால் ஆசைப்படுகிறோம் .----- கௌதம புத்தர்



பொது அறிவு :


1." உயிர் காக்கும் உன்னத உலோகம் " என அழைக்கப்படும் உலோகம் எது? 


ரேடியம்.


2." கருப்பு ஈயம் " என்றழைக்கப்படும் தாது எது? 


கிராபைட்.


English words & meanings :


Palate - The roof of the mouth மேல் வாய், 


Palette - board for mixing colours. வண்ணங்கள் கலக்கும் பலகை

ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலை: பல ஆரோக்கிய நன்மைகளின் கலவை


நிலக்கடலை ஒரு சுவையான உணவு. இது குளிர்காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் வேர்க்கடலையில் உள்ள ஏராளமான நன்மைகளால் அது ஒரு சூப்பர்ஃபுட் அதாவது மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. 


ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும். 


- தோல் பிரச்சனைகளில் (Skin Problems) இருந்து நிவாரணம் கிடைக்கும்.


- செரிமானம் சரியாகி மூளை திறன் அதிகரிக்கும்.


- இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.


- அதிக நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். 


கணினி யுகம் :


Ctrl + Shift + # - Format number in date format 


Ctrl + Shift + % - Format number in percentage format



நீதிக்கதை


 ரூபாய் நோட்டு


ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.


செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.


மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.


இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.


கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.


அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.


இன்றைய செய்திகள்


22.10.21


★ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக, ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தடுப்பணை நிரம்பியது.



★மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


★12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


★கடந்த1990ம் ஆண்டு இந்தியா இருந்ததைவிட, தற்போது 15 சதவீதம் கூடுதலாக வெப்பத்தால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்று லான்சென்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


★பிரான்ஸில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் 2 லட்சத்துக்கு அதிகமான வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு.


Today's Headlines


🌸 213 mm of rain fell in one day due to cloudburst at Bethanayakkan camp next to Athur.  The rain poured down.  As a result, the Vashishta River flooded and the Attur dam overflowed.



 🌸 The science proficiency test looking for young scientists among students will take place on November 30th and December 5th.  You can apply by October 31 to participate in this exam.


 🌸 The Directorate of State Examinations has announced that the results of the Class 12 bye-examination will be released tomorrow at 11 am.


 🌸 The Lancet study found that India is now 15 percent more likely to be affected by heat than it was in 1990.


 🌸More than 2 lakh homes in France have been left without electricity due to the uprooting of trees in various places due to the storm.


 🌸 Schedule released for the Junior World Cup of Hockey.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns