பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.
குறள் 426:
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
விளக்கம்:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
பழமொழி :
Necessity knows no low. All is fair in love and war.
ஆபத்துக்கு பாவம் இல்லை.
பொன்மொழி:
I am the captain of my soul. I am the master of my fate.
என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன்.
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
பொருளின் கட்டுமான அலகு - அணு
வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Deliver - வழங்குதல்
Demand - தேவை
Demolish - இடித்தல்
Depart - புறப்படுதல்
Descend - இறங்குதல்
Desert - பாலைவனம்
ஆரோக்கியம்
தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?
தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.
இன்றைய சிறப்புகள்
பிப்ரவரி 17
1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.
1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.
1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.
2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (கொசோவோ, 2008)
புரட்சி நாள் (லிபியா)
நீதிக்கதை
தேனும் கசந்தது
உணவைத் தேடி ஒரு கரடி காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்தமான வேர்கள், கொத்துக்கொத்தான பழங்கள், தேன் முதலியவற்றை நினைத்தாலே அதற்கு நாக்கில் நீர் ஊறிற்று. அது ஓர் அடர்த்தியான காடு; பல மயில்கள் பரவி இருந்தது. தன் பசியை போக்க கூடிய உணவு எப்போது கிடைக்கும் என்று எண்ணியவாறு கரடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது.
சற்றுத் தொலைவில் மரக்கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று திடீரென்று அதன் கண்களுக்கு தென்பட்டது. அந்த மரத்தை நோக்கி கரடி சென்றது. அருகில் நெருங்கியது; தேன்கூடு ஒன்று கிளையில் இருந்து தொங்குவதை கண்டதும் அதற்கு வியப்பு தாங்கவில்லை. நம்ப முடியாமல் தன் கண்களை தேய்த்துக் கொண்டது.
மரக்கிளையிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது தேன்கூடா? ஆம், தேன் கூடுதான். தன் அதிர்ஷ்டத்தை கரடியால் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. தேன்கூட்டுக்குள் தேனீக்கள் இருக்கின்றனவா என்று உற்று நோக்கியது. அங்கு தேனீக்கள் இல்லை மிக உற்சாகத்தோடு சுவையான தேனைத் தேன் கூட்டில் இருந்து எடுக்க தன் காலை தூக்கியது.
அந்த நேரத்தில் சத்தமாக ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீ கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடி துணுக்குற்றது. அந்தக் கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை நெருங்கும் போது அங்கிருந்த கரடியை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடி அபகரிக்க வருவதைக் கண்ட தேனீக்கள் கரடியை சூழ்ந்து கொண்டு கோபத்துடன் அதை கொட்ட ஆரம்பித்தன.
தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு அதிகமாக ஆத்திரம் ஏற்பட்டது. “எனக்கு கிடைக்காத தேன், தேனீக்களுக்கும் கிடைக்கக்கூடாது” என்று கரடி எண்ணியது. மேலே எழும்பி குதித்து கூட்டை கைப்பற்ற எண்ணியது. கைப்பற்றியவுடன் கூட்டை கீழே போட்டு உடைத்து அதை அழிக்க வேண்டும் என்று வெறி அதற்கு ஏற்பட்டது.
ஆனால், புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாரே அவை கரடியை சுற்றி சுற்றி வந்து வலிமையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளால் கொட்டின. மறுமுறையும் தேனீக்கள் தாக்கியவுடன் கரடி திகைத்துப் போனது. தேன் கூட்டை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டது. அவை இன்னமும் அதிகமாக தாக்குவதற்குள் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள தீர்மானித்தது.
கரடி மிக வேகமாக ஓடியது. ஆனால், அதன் உடலில் பல இடங்களிலும் கொட்டியவாறு தேனீக்கள் கரடியை பின் தொடர்ந்தன. தங்களுடைய தேனை பேராசை பிடித்த அந்த கரடி மறுபடியும் திருடாமல் இருக்க தேனீக்கள் அதற்கு ஒரு பாடம் புகட்ட விரும்பின.
அந்த அளவு தேனை சேகரிக்க தேனீக்கள் அரும்பாடு பட்டுள்ளன. தங்களுடைய கடுமையான உழைப்பின் பலனை கரடி அனுபவிக்க எண்ணியதை தேனீக்கள் விரும்பவில்லை. தேனீக்களுக்கு கரடி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்தன.
தேனீக்களிடம் பயந்து போன அந்த கரடிக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. காட்டுக்கு நடுவில் வேகமாக ஓடி ஆற்றுக்கு அருகில் கரடி வந்து சேர்ந்தது. ஓடி வந்த கரடி குளிர்ந்த நீருக்குள் குதித்தது. தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட எரிச்சலை குளிர்ந்த நீர் தணித்தது. நீருக்குள் கரடி நீண்ட நேரம் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டது. பொறுமை இழந்து தேனீகள் தம் கூட்டை நோக்கி திரும்பும் வரையில் தண்ணீருக்கடியிலேயே கரடி காத்திருந்தது.
உடலில் பட்ட காயத்தால் வருந்திய கரடி தண்ணீரை விட்டு வெளியேறி தன் இடத்திற்கு சென்றது. இனிமேல் தேன் கூட்டு பக்கம் போவதில்லை என்று தீர்மானித்தது. இனிப்பான தேனை நினைத்தாலே கசப்பான இந்த அனுபவம் தான் அதன் நினைவுக்கு வரும்.
நீதி : ஆசை, வெறியினால் அழிவு உறுதி.
இன்றைய முக்கிய செய்திகள்
17-02-2025
2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும்; பிரதமர் மோடி நம்பிக்கை...
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும்: டொனால்டு டிரம்ப்...
பாஸ்டேக் கொண்டுவந்துள்ள புதிய விதிகள்: 17ஆம் தேதி முதல் அமல்...
ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: செயல்பாடுகள் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்...
சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்...
நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா..? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம்...
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு தகவல்...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது..? ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி...
உத்திர பிரதேசம் கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு...
அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை...
Today's Headlines:
17-02-2025
The country's textile exports will reach Rs 9 lakh crore by 2030; Prime Minister Modi is confident...
Women's Entitlement Scheme to be expanded; Deputy Chief Minister Udhayanidhi Stalin...
US to provide F-35 jets to India: Donald Trump...
New rules introduced by FASTag: Effective from the 17th...
Union Government's Panchayats' Power Sharing Index Report Released: Tamil Nadu tops the performance index...
7 places including Poondi, Kolli Hills, Jawvadhu Hills selected to promote adventure tourism: Tourism officials inform...
If you ask for financial rights, are you threatening Tamil Nadu to accept Hindi? Deputy Chief Minister Udhayanidhi strongly condemns the Union Education Minister...
Indian students studying in the US generate an annual revenue of ₹69,000 crore, according to the US government...
Which section of the Indian Constitution makes the trilingual policy mandatory? Chief Minister M.K. Stalin's question to the Union Minister...
18 people killed in stampede at Delhi railway station as people headed to Kumbh Mela in Uttar Pradesh...
Appropriate funds should be allocated without looking at politics. Don't instigate another language war: Minister Anbil Mahesh warns the central government...
- Kalvi Anjal