கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (31-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 31, 2021



தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  ஆரஞ்சு நிறம்



அஸ்வினி :  முன்னேற்றமான நாள்.


பரணி :  கீர்த்தி உண்டாகும்.


கிருத்திகை :  நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 31, 2021



கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆலோசனைகள் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  2


அதிர்ஷ்ட  நிறம்  :  வெள்ளை நிறம்



கிருத்திகை :  நுணுக்கங்களை அறிவீர்கள்.


ரோகிணி :  உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------






மிதுனம்

அக்டோபர் 31, 2021



சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  9


அதிர்ஷ்ட  நிறம்  :  சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் :  லாபம் அதிகரிக்கும்.


திருவாதிரை :  வாய்ப்புகள் ஏற்படும்.


புனர்பூசம் :  திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 31, 2021



சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், அது சார்ந்த உதவிகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.  கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  8


அதிர்ஷ்ட  நிறம்  :  அடர் நீலம்



புனர்பூசம் :  உதவிகள் கிடைக்கும்.


பூசம் :  வாய்ப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் :  புதுமையான நாள்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 31, 2021



பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குழப்பமான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  4


அதிர்ஷ்ட  நிறம்  :  சாம்பல் நிறம்



மகம் :  ஆர்வம் அதிகரிக்கும்.


பூரம் :  சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரம் :  நன்மையான நாள்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 31, 2021



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  7


அதிர்ஷ்ட  நிறம்  :  பழுப்பு நிறம்



உத்திரம் :  மாற்றம் உண்டாகும்.


அஸ்தம் :  ஆதரவு கிடைக்கும்.


சித்திரை :  ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------






துலாம்

அக்டோபர் 31, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி விடுதலை பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். முன்னேற்றமான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  3


அதிர்ஷ்ட  நிறம்  :  இளம் மஞ்சள்



சித்திரை :  உதவிகள் கிடைக்கும்.


சுவாதி :  நம்பிக்கை மேம்படும்.


விசாகம் :  கவலைகள் நீங்கும்.

---------------------------------------






விருச்சிகம்

அக்டோபர் 31, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். தந்தைவழி தொழில் சார்ந்த முயற்சிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  ஊதா நிறம்



விசாகம் :  பொறுப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை :  கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------






தனுசு

அக்டோபர் 31, 2021



வெளிவட்டாரங்களில் உள்ள நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெருமைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :  1


அதிர்ஷ்ட  நிறம்  :  சிவப்பு நிறம்



மூலம் :  அனுபவம் மேம்படும்.


பூராடம் :  அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : சாதுர்யம் வெளிப்படும்.

---------------------------------------






மகரம்

அக்டோபர் 31, 2021



கால்நடை சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்தநிலையும் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :  5


அதிர்ஷ்ட  நிறம்  :  இளஞ்சிவப்பு



உத்திராடம் :  முன்கோபமின்றி செயல்படவும்.


திருவோணம் :  மந்தநிலை ஏற்படும். 


அவிட்டம் :   கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 31, 2021



வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் செல்லும் சிறு தூரப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :  6


அதிர்ஷ்ட  நிறம்  :  வெளிர் பச்சை



அவிட்டம் :  தெளிவு பிறக்கும்.


சதயம் :  மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------






மீனம்

அக்டோபர் 31, 2021



மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட  திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :  4


அதிர்ஷ்ட  நிறம்  :  ஊதா நிறம்



பூரட்டாதி :  மாற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி :  சாதகமான நாள்.


ரேவதி :  சிக்கல்கள் குறையும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...