அவசரம் // தனிக்கவனம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.25154 / அ1 / இ2 / 2021, நாள். 24.01.2022.
பொருள்: பள்ளிக் கல்வி 2021-22ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்பான அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.
பார்வை: 1) அரசாணை (நிலை)எண்: 176, பள்ளிக் கல்வி (பக5(1) துறை, நாள்.17:12.2021
2)பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்: 30.12.2021, 06.1.2022, 07.1.2022, 08.1.2022, 10.1.2022, 20.1.2022, 21.1.2022, 22.1.2022 மற்றும் 24.1.2022
பார்வை-2ல் காணும் 24.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி-3ற்கு கீழ்க்காணுமாறு திருத்தம் செய்து வாசிக்குமாறும் அதன் தொடர்ச்சியாக சில கூடுதல் அறிவுரைகளும் கீழ்க்காணுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
1. கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன் / மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியினை தான் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதற்கு பதிலாக அவர்கள் விரும்பும் ஏனைய மாவட்டத்தினையும் தெரிவு செய்துகொள்ளலாம்.
2. கணவன் / மனைவி மேற்காண் முன்னுரிமையினை (Spouse Priority) எவரேனும் ஒருவர் பயன்படுத்தினால் கூட அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முன்னுரிமையினை (Priority) கோரக்கூடாது.
3. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின்முன்னுரிமையின் (Seniority basis) அடிப்படையில் அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியித்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவருக்கு பின்னர் வரும் Resultant Vacancy ஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
4.மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District Transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)
5. மேலும் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent) (அ) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மேற்காண் அறிவுரைகளிண்படி காலிப்பணியிடங்கள் மற்றும் மாறுதல் விண்ணப்பங்களில் அனைத்து முறையீடுகள், திருத்தங்கள் ஆகியவற்றினை குறித்த காலக்கெடுவிக்குள் சரிசெய்யப்படவேண்டும். கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் தெரிவிக்கப்படும் எவ்வித முறையீடுகளும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.