கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்னுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னுரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசாணை எண்.176, ப.க.து. நாள்: 17.12.2021ன் படி (General Transfer Counselling Policy for Teachers) - மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) அடிப்படையில் கலந்து கொள்ளும் 9 வகையான ஆசிரியர்கள் & ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு பெறும் (Exemption) 5 வகையான ஆசிரியர்கள்...


அரசாணை எண்.176, ப.க.து. நாள்: 17.12.2021ன் படி (General Transfer Counselling Policy for Teachers) - மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority) அடிப்படையில் கலந்து கொள்ளும் 9 வகையான ஆசிரியர்கள் & ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு பெறும் (Exemption) 5 வகையான ஆசிரியர்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021 (G.O.(Ms) No.176, Dated: 17.12.2021)  -School Education - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders -Issued. School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...


EMIS - தற்போது Seniority Challenge செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (Now facility of Seniority Challenge has been established in EMIS Website)...

 EMIS - தற்போது Seniority Challenge செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (Now facility of Seniority Challenge has been established in EMIS Website)...


ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் தற்போது Seniority Challenge (மாவட்டத்திற்குள் மட்டும்) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் தாய் ஒன்றியத்தில் பராமரிக்கப்படும் முன்னுரிமை விவரங்கள் கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Asking Priority details maintained in the Mother Block of Secondary Grade Teachers who have left the Block in Surplusand are scheduled to work in Other Block - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 02-02-2022...

 


>>> ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் தாய் ஒன்றியத்தில் பராமரிக்கப்படும் முன்னுரிமை விவரங்கள் கோருதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Asking Priority details maintained in the Mother Block of Secondary Grade Teachers who have left the Block in Surplusand are scheduled to work in Other Block - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 02-02-2022...


கடந்த ஆண்டுகளில் பணிநிரவலில் போது வேறு ஒன்றியங்களுக்கு செனறு தாய் ஒன்றியத்தில் முன்னுரிமை பேணும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை இன்று 02.02.2022 மாலைக்குள் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

Spouse Priority உள்ளவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் எடுக்கலாம் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் கலந்து கொள்வோருக்கு பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள காலியிடம் காட்டப்படமாட்டாது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (CSE Proceedings - The latest instructions on Spouse priority, resultant vacancies and inter district transfers) ந.க.எண்‌.25154 / அ1 / இ2 / 2021, நாள்‌.24.01.2022....



>>> Spouse Priority உள்ளவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் எடுக்கலாம் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் கலந்து கொள்வோருக்கு பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள காலியிடம் காட்டப்படமாட்டாது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (CSE Proceedings) ந.க.எண்‌.25154 / அ1 / இ2 / 2021, நாள்‌.24.01.2022....


அவசரம்‌ // தனிக்கவனம்‌

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்,‌ சென்னை-6

ந.க.எண்‌.25154 / அ1 / இ2 / 2021, நாள்‌. 24.01.2022.


பொருள்‌: பள்ளிக்‌ கல்வி 2021-22ஆம்‌ ஆண்டு ஆசிரியர்கள்‌ பொதுமாறுதல்‌ கலந்தாய்வு சார்பான அறிவுரைகள்‌ வழங்குதல்‌- சார்பு.


பார்வை: 1) அரசாணை (நிலை)எண்‌: 176, பள்ளிக்‌ கல்வி (பக5(1) துறை, நாள்‌.17:12.2021

2)பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌ இதே எண்ணிட்ட நாள்‌: 30.12.2021, 06.1.2022, 07.1.2022, 08.1.2022, 10.1.2022, 20.1.2022, 21.1.2022, 22.1.2022 மற்றும் ‌24.1.2022


பார்வை-2ல்‌ காணும்‌ 24.1.2022 நாளிட்ட செயல்முறைகளில்‌ பத்தி-3ற்கு கீழ்க்காணுமாறு திருத்தம்‌ செய்து வாசிக்குமாறும்‌ அதன்‌ தொடர்ச்சியாக சில கூடுதல்‌ அறிவுரைகளும்‌ கீழ்க்காணுமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.


1. கணவன்‌-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில்‌ மாறுதல்‌ கோரி விண்ணப்பித்தவர்கள்‌ கணவன்‌ / மனைவி எந்த மாவட்டத்தில்‌ பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தில்‌ உள்ள பள்ளியினை தான்‌ தெரிவு செய்யப்படவேண்டும்‌ என்பதற்கு பதிலாக அவர்கள்‌ விரும்பும்‌ ஏனைய மாவட்டத்தினையும்‌ தெரிவு செய்துகொள்ளலாம்‌.


2. கணவன்‌ / மனைவி மேற்காண்‌ முன்னுரிமையினை (Spouse Priority) எவரேனும்‌ ஒருவர்‌ பயன்படுத்தினால்‌ கூட அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முன்னுரிமையினை (Priority) கோரக்கூடாது.


3. மாறுதல்‌ கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள்‌ அவர்களின்‌முன்னுரிமையின் (Seniority basis) அடிப்படையில்‌ அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியித்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌. அவருக்கு பின்னர்‌ வரும்‌ Resultant Vacancy ஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.


4.மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ (Inter District Transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள்‌ கலந்தாய்வின்‌ போது தற்போது பணிபுரியும்‌ மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில்‌ உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும்‌. (தனியரின்‌ தற்போது பணிபுரியும்‌ மாவட்டம்‌ EMIS இணையத்தில்‌ காண்பிக்கப்படமாட்டாது)


5. மேலும்‌ மாறுதல்‌ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும்‌ அன்றைய நாளில்‌ வருகைபுரியாமலோ (Absent) (அ) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இயலாது.


மேற்காண்‌ அறிவுரைகளிண்படி காலிப்பணியிடங்கள்‌ மற்றும்‌ மாறுதல்‌ விண்ணப்பங்களில்‌ அனைத்து முறையீடுகள்‌, திருத்தங்கள்‌ ஆகியவற்றினை குறித்த காலக்கெடுவிக்குள்‌ சரிசெய்யப்படவேண்டும்‌. கலந்தாய்வு நடைபெறும்‌ அன்றைய நாளில்‌ தெரிவிக்கப்படும்‌ எவ்வித முறையீடுகளும்‌ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...