கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election 2022)- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் தகவல்...

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல் தகவல் 


  நடைபெறவுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி  தேர்தலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பணியினை செம்மையுற செய்வதற்கும் மிக எளிமையான முறையில் இந்த தேர்தல் பணியினை அணுகுவதற்கும் ஒரு வழிகாட்டுதல் நிகழ்வு 


 தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். 


🏵️ *PART -I* 🏵️


 *தேர்தலுக்கு முதல் நாள்


❇️ காலை 10 மணிக்குள் நீங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கு சென்று விடுங்கள்.


❎ உங்கள் ஆணையினை பெற்றுக் கொண்டவுடன் உடன் பணிபுரிபவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.


✳️பின்னர் மதியம் 12 மணிக்குள் உங்கள் வாக்குச் சாவடியை அடைந்து விடுங்கள்.


❇️ வாக்குச் சாவடியை அடைந்தவுடன் உங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் வாக்குச்சாவடி  பெயர் முதலியவை உங்களுக்கு உரியதுதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


✅ தேவையான தளவாட வசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான டேபிள் மேசை பணியாளர்களுக்கான நாற்காலிகள் ஏஜெண்டுகள் அமர்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்தும் போதுமான அளவில் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


இல்லாவிடில் அங்கு உள்ள பணியாளரிடம் சொல்லி  தேவையானவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்.


🛑 குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா?


🛑 கழிப்பறை வசதி சரியாக உள்ளதா?


🛑 மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் வந்து செல்ல சாய்வு நடைபாதை (Ramp) வசதி உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.



⚛️ பின்னர் வாக்குச் சாவடியை சுற்றிலும் 200 மீட்டர் கோடு வரையப்பட்டுள்ளதா? 100 மீட்டர் கோடு வரைய பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


 ⭕மேலும் வாக்குச் சாவடிக்குள் எந்தவிதமான தலைவர் படங்களோ மற்றும் பிற படங்களோ (குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பந்து போன்ற சின்னங்கள் தரப்பட்டிருக்கலாம். எனவே எந்த விதமான படங்களும் இல்லாதவாறு மறைக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் வெள்ளைத்தாள் மூலம் செல்லோடேப் மூலம் அவற்றை மறைத்து விடுங்கள்.


( தயவுசெய்து பசை எதுவும் பூசி அங்கு வரையப்பட்ட படங்களை நீங்கள் சேதப்படுத்தி விட வேண்டாம்) அவற்றை மறைக்கும் விதத்தில் செல்லோடேப் ஒட்டிக் கொள்ளுங்கள்.


🛑 அதேபோல் மின்விளக்கு வசதி உள்ளதா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.


🛑 மைதானத்தில் நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.


🛑 அதேபோல் வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய பணியாளர் எவரேனும் வரவில்லை எனில் உடனடியாக உங்கள் Zonal அலுவலருக்கு தகவல் தெரிவித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள்.


*தேர்தல் பொருள்களை பெறுதல்


🛑 உங்கள் வாக்குச்சாவடிக்கு Zonal ஆபீசடமிருந்து பொருட்கள் வந்தடையும். அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொண்ட பொருள்களை உங்களுக்கு தரப்பட்டிருக்கும் செக்லிஸ்ட் வைத்து அவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


ஏதேனும் பொருட்கள் விடுபட்டிருந்தால் அல்லது படிவங்கள் விடுபட்டு இருந்தால் அவற்றை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த முறை மீண்டும் Zonal ஆபீசர்ஸ் வரும்போது அவர்களிடம் மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.


🛑 முக்கியமாக *மெட்டல் சீல்* Distinguish சீல் ஆகியவற்றை தனியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.


*தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்தல்*


உங்களுக்கு தரப்பட்ட படிவம்,

உறைகள் ஆகியவற்றில் வாக்குச்சாவடி எண் வாக்குச்சாவடி பெயர், தேர்தல் நாள் முதலான பொது விவரங்களை முன்கூட்டியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.


அதேபோல் நீலநிற பேப்பர் சீலில் இருக்கக்கூடிய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.



Special Tag ல் தரப்பட்டுள்ள எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.


மேலும் காலையில் Mock poll நடத்துவதற்கு தேவையான மெழுகுவர்த்தி, அரக்கு, நூல், தீப்பெட்டி, பிளேடு, Special Tag, Address Tag முதலானவற்றை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.



இவை அனைத்தையும் முதல் நாள் மாலைக்குள் நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.



🛑அடுத்தபடியாக படிவங்கள் மற்றும் உறைகள் மற்றும் பெரிய உறைகள் என தரப்பட்டிருக்கும்.


அவற்றை அந்தந்த படிவங்கள் வாரியாக அந்த சின்ன உறைகளில் போட்டு அவற்றை பெரிய உறைகளுக்குள் வைத்து விடுங்கள்.


இவ்வாறு வைக்கப்பட்ட அனைத்து படிவங்கள் மற்றும் உறைகளையும்  ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் உறையின் மேல் பகுதியில் தேர்தல் நாள்  வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர் முதலான பொதுவான அனைத்து விவரத்தையும் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

 


 *பரிசோதித்தல்*


உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Control unit , Ballot Unit ஆகியவற்றை இணைத்து அவை நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


அவற்றில் ஏதேனும் பழுது இருப்பின் உடனடியாக உங்களுடைய Zonal அலுவலரிடம் தகவல் சொல்லி அதனை சரி செய்யவோ அல்லது வேறு கருவியை மாற்றித்தரும் படி  அவர்களிடம் கோரி மாலைக்குள்ளாகவே செய்து கொள்வது காலைநேர நம்முடைய பதட்டத்தினை குறைக்கும்.



இவற்றை செய்து முடித்த பிறகு *வாக்காளர்களுக்கான தகவல் போஸ்டர்கள் ஒட்டுதல், வாக்குச்சாவடி குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒட்டுதல், வேட்பாளர் பட்டியல், உள்ளே வெளியே* முதலான அறிவிப்புகளை ஒட்டுதல் முதலான அனைத்தையும் ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.



முடிந்தவரை பள்ளிகளில் அழகழகாக வண்ணங்கள் மற்றும் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பின் தயவு செய்து அவற்றின் மீது பசையை போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் மூலம் மிக எளிமையாக உறித்து எடுக்கக்கூடிய வகையில் தயவு செய்து ஒட்டவும்.


🛑 அதேபோல் படிவங்கள் மற்றும் உறைகளில் பொதுவான விவரங்களை எழுதி நீங்கள் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.


கவர்கள், படிவங்கள் ஆகியவற்றில் உள்ள தகவல்களையும் மறக்காமல் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.


அதேபோல் வாக்காளர்களுக்கு தரக்கூடிய சிலிப்களை அவற்றின் வரிசை எண் முதலானவை எழுதி 50 - 50 ஆக ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்துக் கொள்ளலாம்.


🛑இந்த அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்துவிட்டு இரவு 10 மணிக்குள் உறங்கச் செல்லலாம்.



🛑மேலும் முதல் நாள் இரவே ஏஜெண்டுகளின் போன் நம்பரை தவறாமல் பெற்றுக் கொள்ளுங்கள்.


அல்லது ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்கு முதல் நாள் வருவார்களேயானால்  என்னென்ன பொருட்களை கொண்டுவர வேண்டும்.

அவர்கள் கொண்டு வரவேண்டிய படிவம் முதலானவற்றை தெரிவித்து விடுங்கள்.


🛑அதேபோல் அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளவர் மட்டும்தான் அந்த வாக்குச் சாவடிக்குள் ஏஜென்டாக இருக்கமுடியும் என்ற தகவல் தெரிவித்து விடுங்கள்.


🛑காலை  5:30 லிருந்து 6 மணிக்குள் கட்டாயம் வந்து விட அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்.


🛑அதேபோல் முடிந்த வரை இரவு நேரத்திலேயே வாக்குச்சாவடி அமைப்பை அதாவது மாதிரி வாக்கு பதிவுக்கான அந்த அறையை நீங்கள் அமைத்து வைத்துக் கொள்வது நல்லது.


நன்றி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...