கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மேயர் - துணைமேயர், நகராட்சி & பேரூராட்சி தலைவர் & துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடும் இடங்கள் (Urban Local Body Election - DMK Alliance Parties Candidates Contesting for the posts of Mayor - Deputy Mayor, Municipal & Town Panchayat President & Vice President)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் (Urban Local Body Election - The results of the counting of votes can be found on the website of the Tamil Nadu State Election Commission on Tuesday 22.02.2022 at 8.00 am)...
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
>>> தமிழ்நாடு தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு...
>>> வலைதள முகவரி (Website Link)...
வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission circular on Voter Identification Documents)...
>>> வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை...
Election Commission specifies the following documents for establishing the identity of such electors:-
(I) Electoral Photo Identity Card (EPIC) provided under the authority of the Election Commission of India;
(II) Passport;
(iii) Driving License;
(iv) Service Identity Cards with Photograph issued to Its employees by State / Central Government, Public Sector Undertakings, Local Bodies or Public Limited Companies;
(v) Passbooks with photograph issued by Public Sector Banks / Post Office;
(vi) PAN Card;
(vii) Smart Card issued by RGI under NPR;
(viii) Job Cards under MGNREGA ,cheme with Photograph;
(Ix) Health Insurance Scheme Smart Cards with Photograph issued by the State or Central Government authorities.
(x) Pension Documents with Photograph, such as Ex-servicemen's Pension Book/Pension Payment Order / Ex-servicemen's Widow / Dependent Certificates;
(xi) Official Identity Cards Issued to MPs/MLAs/MLCs; and
(xii) Aadhaar Card.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election)- பணி நியமன வாக்குச் சாவடி ஒதுக்கீடு குறித்து அறிந்து கொள்ள வலைதள இணைப்பு (Website Link)...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - பணி நியமன வாக்குச் சாவடி ஒதுக்கீடு குறித்து அறிந்து கொள்ள வலைதள இணைப்பு...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் (Urban Local Body Election 2022)- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் தகவல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல் தகவல்
நடைபெறவுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பணியினை செம்மையுற செய்வதற்கும் மிக எளிமையான முறையில் இந்த தேர்தல் பணியினை அணுகுவதற்கும் ஒரு வழிகாட்டுதல் நிகழ்வு
தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
🏵️ *PART -I* 🏵️
*தேர்தலுக்கு முதல் நாள்
❇️ காலை 10 மணிக்குள் நீங்கள் பயிற்சி பெற்ற மையத்திற்கு சென்று விடுங்கள்.
❎ உங்கள் ஆணையினை பெற்றுக் கொண்டவுடன் உடன் பணிபுரிபவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
✳️பின்னர் மதியம் 12 மணிக்குள் உங்கள் வாக்குச் சாவடியை அடைந்து விடுங்கள்.
❇️ வாக்குச் சாவடியை அடைந்தவுடன் உங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் வாக்குச்சாவடி பெயர் முதலியவை உங்களுக்கு உரியதுதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
✅ தேவையான தளவாட வசதி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான டேபிள் மேசை பணியாளர்களுக்கான நாற்காலிகள் ஏஜெண்டுகள் அமர்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்தும் போதுமான அளவில் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இல்லாவிடில் அங்கு உள்ள பணியாளரிடம் சொல்லி தேவையானவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்.
🛑 குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா?
🛑 கழிப்பறை வசதி சரியாக உள்ளதா?
🛑 மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் வந்து செல்ல சாய்வு நடைபாதை (Ramp) வசதி உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
⚛️ பின்னர் வாக்குச் சாவடியை சுற்றிலும் 200 மீட்டர் கோடு வரையப்பட்டுள்ளதா? 100 மீட்டர் கோடு வரைய பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
⭕மேலும் வாக்குச் சாவடிக்குள் எந்தவிதமான தலைவர் படங்களோ மற்றும் பிற படங்களோ (குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பந்து போன்ற சின்னங்கள் தரப்பட்டிருக்கலாம். எனவே எந்த விதமான படங்களும் இல்லாதவாறு மறைக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் வெள்ளைத்தாள் மூலம் செல்லோடேப் மூலம் அவற்றை மறைத்து விடுங்கள்.
( தயவுசெய்து பசை எதுவும் பூசி அங்கு வரையப்பட்ட படங்களை நீங்கள் சேதப்படுத்தி விட வேண்டாம்) அவற்றை மறைக்கும் விதத்தில் செல்லோடேப் ஒட்டிக் கொள்ளுங்கள்.
🛑 அதேபோல் மின்விளக்கு வசதி உள்ளதா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
🛑 மைதானத்தில் நிழலுக்கு சாமியானா பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
🛑 அதேபோல் வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய பணியாளர் எவரேனும் வரவில்லை எனில் உடனடியாக உங்கள் Zonal அலுவலருக்கு தகவல் தெரிவித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள்.
*தேர்தல் பொருள்களை பெறுதல்
🛑 உங்கள் வாக்குச்சாவடிக்கு Zonal ஆபீசடமிருந்து பொருட்கள் வந்தடையும். அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொண்ட பொருள்களை உங்களுக்கு தரப்பட்டிருக்கும் செக்லிஸ்ட் வைத்து அவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏதேனும் பொருட்கள் விடுபட்டிருந்தால் அல்லது படிவங்கள் விடுபட்டு இருந்தால் அவற்றை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த முறை மீண்டும் Zonal ஆபீசர்ஸ் வரும்போது அவர்களிடம் மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
🛑 முக்கியமாக *மெட்டல் சீல்* Distinguish சீல் ஆகியவற்றை தனியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
*தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்தல்*
உங்களுக்கு தரப்பட்ட படிவம்,
உறைகள் ஆகியவற்றில் வாக்குச்சாவடி எண் வாக்குச்சாவடி பெயர், தேர்தல் நாள் முதலான பொது விவரங்களை முன்கூட்டியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் நீலநிற பேப்பர் சீலில் இருக்கக்கூடிய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Special Tag ல் தரப்பட்டுள்ள எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் காலையில் Mock poll நடத்துவதற்கு தேவையான மெழுகுவர்த்தி, அரக்கு, நூல், தீப்பெட்டி, பிளேடு, Special Tag, Address Tag முதலானவற்றை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் முதல் நாள் மாலைக்குள் நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
🛑அடுத்தபடியாக படிவங்கள் மற்றும் உறைகள் மற்றும் பெரிய உறைகள் என தரப்பட்டிருக்கும்.
அவற்றை அந்தந்த படிவங்கள் வாரியாக அந்த சின்ன உறைகளில் போட்டு அவற்றை பெரிய உறைகளுக்குள் வைத்து விடுங்கள்.
இவ்வாறு வைக்கப்பட்ட அனைத்து படிவங்கள் மற்றும் உறைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் உறையின் மேல் பகுதியில் தேர்தல் நாள் வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர் முதலான பொதுவான அனைத்து விவரத்தையும் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
*பரிசோதித்தல்*
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Control unit , Ballot Unit ஆகியவற்றை இணைத்து அவை நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
அவற்றில் ஏதேனும் பழுது இருப்பின் உடனடியாக உங்களுடைய Zonal அலுவலரிடம் தகவல் சொல்லி அதனை சரி செய்யவோ அல்லது வேறு கருவியை மாற்றித்தரும் படி அவர்களிடம் கோரி மாலைக்குள்ளாகவே செய்து கொள்வது காலைநேர நம்முடைய பதட்டத்தினை குறைக்கும்.
இவற்றை செய்து முடித்த பிறகு *வாக்காளர்களுக்கான தகவல் போஸ்டர்கள் ஒட்டுதல், வாக்குச்சாவடி குறித்த அறிவிப்பு போஸ்டர் ஒட்டுதல், வேட்பாளர் பட்டியல், உள்ளே வெளியே* முதலான அறிவிப்புகளை ஒட்டுதல் முதலான அனைத்தையும் ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.
முடிந்தவரை பள்ளிகளில் அழகழகாக வண்ணங்கள் மற்றும் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பின் தயவு செய்து அவற்றின் மீது பசையை போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் மூலம் மிக எளிமையாக உறித்து எடுக்கக்கூடிய வகையில் தயவு செய்து ஒட்டவும்.
🛑 அதேபோல் படிவங்கள் மற்றும் உறைகளில் பொதுவான விவரங்களை எழுதி நீங்கள் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
கவர்கள், படிவங்கள் ஆகியவற்றில் உள்ள தகவல்களையும் மறக்காமல் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் வாக்காளர்களுக்கு தரக்கூடிய சிலிப்களை அவற்றின் வரிசை எண் முதலானவை எழுதி 50 - 50 ஆக ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்துக் கொள்ளலாம்.
🛑இந்த அனைத்து முன்னேற்பாடுகளையும் நீங்கள் செய்துவிட்டு இரவு 10 மணிக்குள் உறங்கச் செல்லலாம்.
🛑மேலும் முதல் நாள் இரவே ஏஜெண்டுகளின் போன் நம்பரை தவறாமல் பெற்றுக் கொள்ளுங்கள்.
அல்லது ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்கு முதல் நாள் வருவார்களேயானால் என்னென்ன பொருட்களை கொண்டுவர வேண்டும்.
அவர்கள் கொண்டு வரவேண்டிய படிவம் முதலானவற்றை தெரிவித்து விடுங்கள்.
🛑அதேபோல் அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளவர் மட்டும்தான் அந்த வாக்குச் சாவடிக்குள் ஏஜென்டாக இருக்கமுடியும் என்ற தகவல் தெரிவித்து விடுங்கள்.
🛑காலை 5:30 லிருந்து 6 மணிக்குள் கட்டாயம் வந்து விட அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குங்கள்.
🛑அதேபோல் முடிந்த வரை இரவு நேரத்திலேயே வாக்குச்சாவடி அமைப்பை அதாவது மாதிரி வாக்கு பதிவுக்கான அந்த அறையை நீங்கள் அமைத்து வைத்துக் கொள்வது நல்லது.
நன்றி
நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 19-02-2022 அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Urban Local Election - Holiday announced for All Schools on 19-02-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 34462/பிடி1/இ1/2021, நாள்: 16-02-2022...
18.02.2022 வெள்ளி அன்று பள்ளியில் 50% ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்தப் பள்ளிக்கு விடுமுறை...
PRO, PO-1,2,3 அலுவலர்களுக்கான பணிகள் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - விதிகள் - 66, 72, 70, 71, 69 விளக்கம் - முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள் - வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை - MOCK POLL நடத்துதல் - வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்தல் - வாக்குபதிவு முடிவில் தயார் செய்ய வேண்டி உரைகள் - அனைத்திற்கும் தெளிவான விளக்கம் - PDF (Duties and Responsibilities for PRO, PO-1,2,3 Officers - Urban Local Election 2022 - Rules - 66, 72, 70, 71, 69 Description - Forms to be signed by agents - How to handle (EVM) voting machines - Conducting MOCK POLL - Preparation of (EVM) voting machines - Covers to be prepared at the end of the ballot - Clear explanation for all - Modules PDF)...
PRO, PO-1,2,3 அலுவலர்களுக்கான பணிகள் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022...
💥 விதிகள் - 66, 72, 70, 71, 69 விளக்கம்
💥 முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள்
💥 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை
💥 MOCK POLL நடத்துதல்
💥 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்தல்
💥 வாக்குபதிவு முடிவில் தயார் செய்ய வேண்டி உரைகள்
💥 அனைத்திற்கும் தெளிவான விளக்கம் - PDF...
>>> மின்னணு வாக்குப்பதிவு வாக்குச்சாவடி - வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு 2...
>>> வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான குறிப்புகள்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 223, நாள்: 09-02-2022 (Public Holiday Announced on 19-02-2022 of Polling Day in of the urban Local Body Elections - Government of Tamil Nadu Press Release No: 223, Date: 09-02-2022)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறை.
வாக்குப்பதிவு நடைபெறும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே பொதுவிடுமுறை அறிவிப்பு.
தேர்தல் பயிற்சி - அனைத்து மாவட்டங்களுக்கும் 2வது பயிற்சி வகுப்பு தேதி 09-02-2022ல் இருந்து 10-02-2022க்கு மாற்றம் (Election training - 2nd training class date has been changed from 09-02-2022 to 10-02-2022 for all Districts)...
தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? (Who will be exempted from the Election Duty?) - சுற்றறிக்கை U.L.B.Election.C.No./E8/2548/2022 - நாள் : 29.01.2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்...
- எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்,
- மாற்று திறனாளிகள் மற்றும்
- கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....
The categories of employees for whom exemption can be given by the employer are as follows,
i) Any official to be retired within 6 months may be exempted from election related duty.
ii) All pregnant women and lactating mothers (child less than 1 year), whether on maternity leave or not or who mare otherwise on medical advice not to undertake any rigorous or hazardous work, may be exempted from election related duty,
iii) Persons with Disabilities - Physically challenged persons with disabilities may be exempted from the election related duty,
iv) Serious Medical Ailments such as Cancer, dialysis etc.
உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிய இணைப்பு ( Polling Personnel Training Details - Link to find out the place and day of the election training class for you)...
தங்கள் அலைபேசி எண்ணுக்கு கீழே உள்ளது போன்று SMS வரும்.
"Dear Raj K (PP id : 123456),It is informed that you are appointed as Polling Officer - 1 for Urban Local Body Elections - 2022. Your 1st Training Class on 31-01-2022 02:30 PM For further info.: https://tnsec.tn.nic.in/sl/ppps.html - DEO/District Collector , TNSEC:"
கீழேயுள்ள Link மூலம் உங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் PP id எண்ணைப் பதிவு செய்து உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிந்து கொள்ளலாம்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
27-01-2025 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...