கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - தலைமையாசிரியர்களுக்கான தகவல்கள் (School Management Committee Meeting - Information for HeadMasters)...



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - தலைமையாசிரியர்களுக்கான தகவல்கள்...


🥇 இன்று 20.3.2022 அன்று நடைபெறுவது பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த விழிப்புணர்வு கூட்டம்  மட்டுமே


🥇இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட  அனைத்து வகை அலுவலர்களும் வருகை புரியலாம் - கூட்டத்தை மிகச் சரியாக திட்டமிட்டு மாநில திட்ட இயக்குநரின்  கடிதத்தின்படி நடத்தவேண்டும்.


🥇 இன்றைய கூட்டம் மறுகட்டமைப்புகான விழிப்புணர்வு கூட்டம் மட்டுமே


🥇 நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்கள், காணொளிகளாக பதிவு செய்து வைத்துக் கொள்வது நல்லது.


🥇பெற்றோர்களின் வருகையை மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்படி பதிவு செய்து இன்று மதியமே tn emis school app (attendance app) upload  செய்ய வேண்டும் .

இன்று மட்டுமே அவை இயங்கும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்

App Update Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


🥇SMC மறுகட்டமைப்பு அதாவது பள்ளி மேலாண்மைக் குழு 20 உறுப்பினர்களின் தேர்வு  இன்று இருக்காது. இன்று பள்ளி மேலாண்மைக்குழு பற்றியும், 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை பற்றியும், மேலாண்மை குழுவின்  பங்களிப்புகள், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளின் உரிமைகள், பள்ளி வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே இடம்பெற வேண்டும்.


🥇வருகை புரியும் பெற்றோர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்வது நன்று.


🥇 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டத்தை சிறப்பாக திட்டமிட்டு நடத்த வேண்டும். 


🥇 மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தை தெளிவாக படித்து அதன் வழிகாட்டுதல்களை முழுவதுமாக பின்பற்ற வேண்டும்.


🥇🥇 Revised fund details ஐ நன்றாக படிக்கவும்.

பள்ளியில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே செலவு மேற்கொள்வதற்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

 அதாவது ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் இருந்தால் 100 மாணவர்களுக்கு தொகை வழங்கப்படும். 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கு மட்டுமே தொகை ஒதுக்கப்படும். கலந்து கொள்ளும் பெற்றோர்களுக்கு செலவினம் மேற்கொள்ள வேண்டும். முன்பு ரூ 2800 அனைத்து பள்ளிகளுக்கும் என்றிருந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.



தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு,


தங்களது  பள்ளிகளில்

 இன்று 20/03/2022  கீழ்க்காணும் வருகைப் பதிவுகள் TN EMIS App ல் பதிவு செய்ய வேண்டும்.


*1. Today's Status


2 *Staff Attendance


 3 *Local body Attendance


4 *SMC meeting parent Attendance


தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...