கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SMC கூட்ட அறிக்கை மாதிரி



SMC கூட்ட அறிக்கை மாதிரி


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்


*இடம்:*********

*நாள்: 25-07.2025 மாலை 3:00-4:30 மணி .


இன்று எம் பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் 'முதல் கூட்டம்' நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.*********  அவர்கள் தலைமையிலும், ஏனைய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தும் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களை பெற்றோர் செயலியில்  வருகையை பதிவு செய்த பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்  வரவேற்புரை நிகழ்த்தி, முன்னதாக தெரிவிக்கப்பட்ட முக்கிய கூட்டப் பொருள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.


இக்கூட்டத்தின் தீர்மானங்கள் 


 *∆ மாநில கற்றல் அடைவு SLAS மற்றும் திறன் மேலாண்மை பங்கு பற்றி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பது என தீர்மானிக்கப்படுகிறது


*∆ எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகள் சத்தமாக வாசிக்க 10-15 நிமிடங்கள் பெற்றோர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது


*∆ பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கான உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்குவதை 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' இணையதளத்தில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது


*∆ மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் உபகரணங்கள் பற்றி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள தீர்மானிக்கப்படுகிறது


*∆ குழந்தைத் திருமணம், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் முறைகளால் விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது


*∆ NSNOP மூலம் வழங்கப்படும் பள்ளியின் தேவைகளை அளவீடு செய்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றி செயலியில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது.


*∆ POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


*∆ பள்ளிக்கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14 417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


*∆ ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை உருவாக்கும் வகையில் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.


∆ மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


 ∆ மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கியில் பணம் சேமிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்க தீர்மானிக்கப்படுகிறது.


         *மேற்காணும் கூட்டப் பொருள் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி விவாதித்து பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்காண் பொருள் சார்ந்து அனைத்து செயல்பாடுகளுக்கும்  ஒத்துழைப்பு  அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.


*மேலும் 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளி ஒருங்கிணைந்த மானியத்திலிருந்து  ரூபாய்----------யை-------,--------,------------ போன்ற செலவினங்களை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


(மேலும் அந்தந்த பள்ளி சூழல் சார்ந்து ஏதேனும் தீர்மானங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக தத்தம் பள்ளிகளில் பணி மாறுதல் காரணமாக ஓய்வு காரணமாக காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் மாற்றுப் பணியில் அல்லது SMC மூலமாகவோ தற்காலிக ஆசிரியர் நியமிக்க தீர்மானிக்கப்படுகிறது என்று தீர்மானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். )


     இறுதியாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களை செயலியின் உரிய பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு இனிப்பு ,தேநீர் வழங்கி, பள்ளியின் ஆசிரியர் பிரதிநிதி திரு/திருமதி********** *அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


*நன்றி 🙏🏻*


TNSED Parents Appல் SMC உறுப்பினர் வருகைப் பதிவு செய்ய முடிகிறது



 Location on செய்தால் TNSED Parents Appல் SMC உறுப்பினர் வருகைப் பதிவு செய்ய முடிகிறது






பணியிட மாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்கள் TNSED Parents Appல் SMC உறுப்பினர்கள் வருகைப் பதிவு செய்யும் முறை



Transfer பெற்ற தலைமை ஆசிரியர்கள் TNSED Parents Appல் SMC உறுப்பினர்கள் வருகைப் பதிவு செய்யும் முறை


 வணக்கம்!


📌SMC-கூட்டம் இன்று *25.07.2025 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது.*


📌மேம்படுத்தப்பட்ட பெற்றோர் செயலியினை பெற *Playstore-இல் TNSED Parents App -யினை Update அல்லது Re-install* செய்து இன்றைய கூட்டத்தின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிட வேண்டும். *(செயலி link கீழே கொடுக்கப் பட்டுள்ளது)*


📌இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC மேம்படுத்தப்பட்ட பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


📌தலைமையாசிரியர் மாறுதல்கள் (HM Transfer) தரவுகள் அடிப்படையில் செயலியில் HM login மற்றும் உறுப்பினர் பட்டியலில் HM பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


📌 சில பள்ளிகளில் *HM மாற்றம் காட்டப்படவில்லை* அவரின் முந்தைய பள்ளியின் உறுப்பினர் பெயர்கள் காண்பித்தால் அவ்வாறான பள்ளிகளில் *SMC-Chairperson login பயன்படுத்தி* வருகை மற்றும் தீர்மானங்களை பதிவிட வேண்டும். 



📌 *கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்*:  https://bit.ly/SMCSupportvideos


📌 *ஊக்கமூட்டும் காணொளி*:  https://youtu.be/qsB-DSC57j4


📌 *புதிய செயலி லிங்க்*:https://bit.ly/TNSEDParentsApp


இன்று (25.07.2025) நடைபெற உள்ள SMC கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - SPD Proceedings



இன்று (25.07.2025) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கான கூடுதல் கூட்டப்பொருள் - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி



SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி


வணக்கம்!

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள்.


SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 25.07.25 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.


குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு.


கூட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும்  திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான  கூட்டப்பொருட்களில்  விழிப்புணர்வு  வழங்கப்படவுள்ளது.


இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!

📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்: https://bit.ly/SMCSupportvideos


📌ஊக்கமூட்டும் காணொளி: https://youtu.be/qsB-DSC57j4


📌புதிய செயலி லிங்க் : https://bit.ly/TNSEDParentsApp🙏


Best SMC Schools Video

 


சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு பள்ளிகள் குறித்த காணொளி


Best SMC Schools Video



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




SMC Meeting: Chief Minister and Minister of School Education Speech



 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் : முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் காணொளி செய்தி


School Management Committee Meeting: Speech Video of the Chief Minister and the Minister of School Education



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


 அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 


அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committee) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை பள்ளிகள் தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.


மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.


பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.


SLAS தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது



>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் & வழிகாட்டுதல்கள் - SPD செயல்முறைகள்...


பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்


பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்


2022 – 2024 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தற்போதைய நிலை,  மேம்படுத்தப்பட்ட புதிய பெற்றோர் செயலியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான வழிகாட்டுதல்கள்:


குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2022 – 24 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.  பள்ளி மேம்பாடு சார்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் TNSED Parent App வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுத் தீர்மானங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பெற்றோர் செயலி முக்கியப் பங்காற்றுகிறது.  

பள்ளி மேலாண்மைக் குழுவின்  தீர்மானங்களை பதிவு செய்யும் பெற்றோர் செயலியின் பயன்பாடு மற்றும் உள்ளீடு செய்வது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு மாநில  ஒருங்கிணைப்புக் குழுவால் மாவட்டம் , வட்டாரம் மற்றும் பள்ளி அளவில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. 


பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நகர்வுகள்:

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற SMC மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்.

மொத்தம் 37,519 அரசுப் பள்ளிகளில் SMC குழுக்கள் மறுக்கட்டமைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 2022 முதல் அக்டோபர் 2024 வரை மொத்தம் 19 முறை SMC கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சராசரியாக 70% உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

35,735 பள்ளிகள், SMC பெற்றோர் செயலியின் மூலம் தீர்மானங்களைப்  பதிவு செய்துள்ளனர் 

பள்ளிகளில் இருந்து 2022- ஆம்  ஆண்டிலிருந்து இருந்து செயலி வழியாக நமக்குக் கிடைத்த  தீர்மானங்களின் மொத்த எண்ணிக்கை  3 லட்சத்திற்கும் மேல் ஆகும். 

பதிவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது சார்ந்து துறைகள் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித்துறைச் செயலரிடமிருந்து  மாவட்ட ஆட்சியருக்கு  கடிதம் அனுப்பப்பட்டது  

தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முறையாக தகவல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் மீதான நடவடிக்கைளை கண்காணிக்க , மாநில அளவிலான கண்காணிப்பு  குழு (SLMC) மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு  குழு (DLMC) போன்ற குழுக்கள்  அமைக்கப்பட்டது .அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது 

மேலும், மாவட்ட கல்வி மீளாய்வு(DER) கூட்டங்களில், பள்ளி மேலாண்மை குழுவின்   தீர்மானங்கள்  ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளியின்  தேவைகள் அனைத்தும் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. 

2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்  ஆகஸ்ட் 2, 2024 அன்று தொடங்கி , ஆகஸ்ட் 31, 2024 வரை  அனைத்து பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிறைவடைந்தது.  இதில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18.9 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்

புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் , 2024 அக்டோபர் மாதம், இது வரை பதிவு செய்யப்பட்டிருந்த  3 லட்சம் தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன்  முன்னேற்றத்தையும்  மற்றும் பள்ளியின் அன்றைய தேவைகளையும்  அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களும் TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம்(status update) செய்தனர்.

தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்ற நிலையை (Status Update) TNSED பெற்றோர் செயலியில் பதிவு செய்யும் செயல்பாட்டுக்கு பின்பு  1,92,543 (24.06.2025 இந்த தேதி வரை ) தீர்மானங்கள் நமக்கு கிடைத்தன. இந்தத் தீர்மானங்களில் 1,50,421 தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இது மொத்தத் தீர்மானங்களில் 78% ஆகும்.

தீர்மானங்கள் / தேவைகள் மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகின்றன: பள்ளி அளவில் தீர்வு காணப்பட  வேண்டியவை,  மாவட்ட அளவில் தீர்வு காணப்பட   வேண்டியவை, மாநில அளவில் தீர்வு காணப்பட  வேண்டியவை என்று பிரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன. 

நிலை தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம் 

Resolved 150421 78%

Unresolved 42122 22%



  தீர்மானங்களின்  எண்ணிக்கை சதவீதம்

பள்ளி அளவில் 60,754 91%

மாவட்ட அளவில் 88,694 71%

மாநில அளவில் 973 71%


அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் 71% தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் உதாரணத்திற்கு வேலை செய்து முடிக்கபட்ட/ தீர்வு கண்டு நிறைவு செய்யப்பட்ட சில முக்கியமான  தீர்மானங்களின் தொகுப்பு இது  

 முக்கியமான  தீர்மானங்களின் தொகுப்பு நிறைவு

உயர் மின்னழுத்தக் கம்பிகளை அகற்றுதல் 562

பழுதடைந்த கட்டடத்தை அகற்றுதல் 3269

பழுதடைந்த சுற்றுச்சுவரை அகற்றுதல் 185

புதிய இயற்பியல் ஆய்வகம் 14

புதிய உயர்-தொழிநுட்ப ஆய்வகம் 125

புதிய உயிரியல் ஆய்வகம் 14

புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் 39

புதிய கணித ஆய்வகம் 14

புதிய கணினி ஆய்வகம் 121

புதிய கலை ஆய்வகம் 16

புதிய கழிப்பறை 143

புதிய கழிவுநீர்த் தேக்கத் தொட்டி 237

புதிய குடிநீர் இணைப்பு 55

புதிய குடிநீர் இணைப்பு - ஊராட்சி 594

புதிய குடிநீர் இணைப்பு - போர்வெல் 197

புதிய சுற்றுச் சுவர் 2675

புதிய நீர் இணைப்பு 196

புதிய நீர் இணைப்பு - ஊராட்சி 1074

புதிய நீர் இணைப்பு - போர்வெல் 572

புதிய மின் இணைப்பு 120

புதிய மின்சார இணைப்பு 612

புதிய வகுப்பறை 1603

புதிய வேதியியல் ஆய்வகம் 12

போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் 294

மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 2009

மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 1416

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 109

மாற்றுத் திறன் கொண்ட மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 46

மொத்தம் 16323





TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்


TNSED புதிய பெற்றோர் செயலியின் சிறப்பம்சங்கள்


Highlights of TNSED Parents New App


 TNSED புதிய பெற்றோர் செயலி

கடந்த இரண்டு ஆண்டுகளில் SMC கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்தும், பதிவேட்டில் பதிவான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டும் நமக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அரசின் துறைகள்  பள்ளியின் தேவைகளான தீர்மானங்களை எடுத்து உடனே வேலையைத்  தொடங்க , தகவல்களை தெளிவாகப் பெறும் மேம்பட்ட வசதிகளோடு புதிய செயலி தேவை அறியப்பட்டது.  

தலைவர் , HM  மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை பரவலாக அறிந்தபோது , பள்ளியின் தேவைகளை செயலி வழியாக பதிவு செய்யும்போது செயலியில் மேம்படுத்த வேண்டியவை பற்றிய கருத்துக்கள் சேகரிகக்கப்பட்டது. 


இந்தச் செயலி 

o SMC தலைவர் ,  HM இருவரும் இணைந்து தீர்மானங்களை செயலியில் பதிய வேண்டுமென்பதால், செயலி  பெற்றோர், SMC தலைவர், HM ஆகியோருக்கு எளிதில் புரியும் வகையிலும்,

o பள்ளியின் அனைத்து தேவைகளையும் ஒரு தொகுப்பாகக் காணும் வகையிலும்,

o தீர்மானங்கள் மீது துறைகள் நடவடிக்கை எடுக்க ஏதுவான வகையிலும்,

இந்த புதிய பெற்றோர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


TNSED புதிய பெற்றோர் செயலி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்

புதிய செயலியில் பள்ளியின் தீர்மானங்களைப்  பதிவிட, பள்ளியின் தேவைகள் 6 தலைப்புகளாக பிரிக்கப்பட்டது. 

1. Emergency (அவசரத்தேவை)

2. மாணவர்கள்

3. கற்றல்

4. நலத்திட்டங்கள், உதவித்தொகைகள்

5. பள்ளி வளாகம்

6. ஆசிரியர்கள், பணியாளர்கள்


o Emergency தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல் 

உயர் மின்னழுத்தக் கம்பிகள் (HT Line)

குறைந்த மின்னழுத்தக் கம்பிகள் (LT Line)

டிரான்ஸ்பார்மர்

மின்கம்பம்

மின் இணைப்பு

மின் கசிவு - ஷாக் அடிக்கிறது 

எர்த் கம்பி  ( Earth wire )

கட்டிடங்கள் - இடிக்க வேண்டியது

அறுவை சிகிச்சையை உறுதிசெய்தல்

பள்ளிச்சூழல் பாதுகாப்பு 

கற்பித்தலுக்கு இடையூறு 

பள்ளி செயல்பட கட்டிடம் இல்லை.

பள்ளி வளாகத்தை சேதப்படுத்துதல்

கிணறு குழிகள் - ( மூடி போடுதல் )

பாம்புகள் நடமாட்டம் 

வனவிலங்கு நடமாட்டம்

திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு அருகில் 

திறந்தநிலை சாக்கடை - பள்ளிக்கு உள்ளே 

திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு அருகில்  

திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டி - பள்ளிக்கு உள்ளே 

திறந்தநிலை ஆழ்துளைக் கிணறு -  ( மூடி போடுதல் )

மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது 

அருகில் குளம் ,கண்மாய் ( தடுப்பு தேவை ) 

பள்ளி முன்பு நெடுஞ்சாலை ( வேகத்தடை தேவை ) 

ஆபத்து உருவாக்கும் மரம் , கிளை அகற்றுதல் 

நான்கு வழிச் சாலை - பேருந்து வேண்டும்

மலைப்பகுதி - பேருந்து வேண்டும்

காட்டுப்பகுதி - பேருந்து வேண்டும்

பேருந்து நிறுத்தம் வேண்டும் - பள்ளி அருகே 

பேருந்து பயணத்தில் மாணவர்களுக்கு நெருக்கடிகள்


o மாணவர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

குழந்தைகளின் ஆரோக்கியம்

குழந்தைகளின் பாதுகாப்பு

போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல்


o கற்றல் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

கற்பித்தலுக்கு துணை செய்யும் கருவிகள்

வகுப்பறை கற்றலுக் கற்பித்தல் பொருட்கள்


o நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

நலத்திட்டங்கள்

அரசு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள்

அரசு உதவித்தொகைகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் தேர்வுகள்


o பள்ளி வளாகம் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

கட்டிடங்கள்  

தண்ணீர் 

மின்சாரம்

காலை / மதிய உணவு

வளாகப் பொருட்கள்

பொது வளாகம்


o ஆசிரியர்கள், பணியாளர்கள் தொகுப்பில் இருக்கும் தேவைகளின் பட்டியல்

ஆசிரியர்

ஆசிரியர் பாதுகாப்பு

பணியாளர்கள் தேவை

பயிற்சிகள்


மேல்கண்ட  ஒவ்வொரு தொகுப்பிற்கு  உள்ளேயும் அது தொடர்பான தேவைகளின் பட்டியலும் . அதன் தொடர்ச்சியாக உப தேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது 

செயலியில் தீர்மானங்களைத்  தேட ஏதுவாக Search Option ஆனது  தேவைகளைப் பட்டியலிடும் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது 

செயலியில் தீர்மானங்கள் சார்ந்து அனைத்து தகவல்களும் சரியாகவும் முழுமையாகவும்  பெறப்படுகிறது 


உதாரணத்துக்கு :

புதிய பேருந்து வசதி  வேண்டும் ‘ என்ற தேவை ( தீர்மானம்)  புதிய செயலியில்  எவ்வாறு இருக்கிறது ,அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும்  கீழே  காணலாம் 





அதாவது பேருந்து வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி ஒரே பக்கத்தில் பதிவிட்டு Submit கொடுக்க முடியும்.

இன்னொரு  உதாரணமாக  பள்ளியில் புதிய மாணவிகள் கழிப்பறை என்ற தேவை (தீர்மானம் ) புதிய செயலியில்  எவ்வாறு இருக்கிறது , அதை வரிசையுடன் பதிவு செய்து submit/சமர்ப்பித்தல் – வரை செல்லும் படத்தையும் – அது செயலியில் எப்படி காண்பிக்கப்படும் என்ற படத்தையும்  கீழே  காணலாம்



அதாவது கழிப்பறை வேண்டும் என்பதை இப்படி மேலே கண்டபடி பதிவிட்டு Submit கொடுக்க முடியும்

செயலியில் பெறப்படும் தீர்மானங்கள், அந்தந்த தேவை சார்ந்து  முழு விபரங்களைப்  பதிவிட ஏதுவாக இடம்பெற்றுள்ளது

செயலியில் தகவலுக்காக மட்டும் பெற்றுக்கொள்ளப்படும் -  என்ற பகுதி இடம் பெற்றுள்ளது . அதாவது ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிய தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் பகுதி இது . அவற்றை பதிவிடும்  பதிவிடங்கள் இடம்பெற்றுள்ளன.

தீர்மானங்கள் சார்ந்தும் பள்ளிக்குழந்தைகள் நலன் சார்ந்தும் தேவையான நேரங்களில் ஆர்வத்துடன் தங்கள் நேரத்தை ஒதுக்கி, பள்ளி மேலாண்மைக் குழு உறுபினர்கள் பள்ளிக்காக செய்யும் வேலைகளைப் பற்றி பதிவிடும்  “SMC பங்கேற்று உதவியது “ என்ற option கொடுக்கப்பட்டுள்ளது. 

தேவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று சொல்வதோடு , அதன் தரத்தைப் பற்றி கூறும் – அதாவது மதிப்பீடு செய்ய ஏதுவாக options உருவாக்கப்பட்டுள்ளது 

முக்கியமாக குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி வளாகத்திலும் , அதைச் சுற்றிலும் உடனடியாக சரி செய்ய வேண்டிய தேவைகளை தீர்மானங்களாகப் பதிவு செய்ய , ‘Emergency needs – மிக அவசரமாக சரி செய்ய வேண்டிய தேவைகள்’ என்று தொகுத்து , செயலியில் நுழைந்ததுமே நாம் பார்க்கும் படியாக முதல் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளது 

மிக மிக அவசியமான தேவைகள் தீர்மானங்களாக இந்த செயலியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது

இப்படி பல புதிய அம்சங்கள் கொண்ட செயலியை பயன்படுத்துவதற்கு வழிகாட்டும்   TNSED பெற்றோர் செயலி பற்றிய  காணொளித் தொகுப்பு (video manual) மற்றும் வழிகாட்டும் PPT போன்றவை மாநில அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.



TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்



 TNSED Parents புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:


நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை புதிய செயலியில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் பின்வரும்வாறு வழங்கப்படுகிறது. 


வருகைப்பதிவு:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறும் அன்றே நமது பெற்றோர்  செயலியில் “உறுப்பினர் வருகை” என்ற optionஇல் உறுப்பினர்களின் வருகையைப் பதிவிட வேண்டும் . 

எப்போதெல்லாம் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தவறாமல் உறுப்பினர்களின் வருகையை செயலியில் பதிவிட வேண்டும். 


தீர்மானங்கள் உள்ளீடு செய்தல்:

பழைய செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு அந்த தேவை  நிறைவேறாமல் (Unresolved) இருப்பின், அவ்வாறான தேவை இன்னும் உங்கள் பள்ளியில் இருந்தால் கூட்டத்தில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதனை புதிய செயலியில் மீண்டும் பதிவிட வேண்டும். 

ஆகஸ்ட்-2025 இல் நடைபெற்ற மறுகட்டமைப்பு முதல் தற்போது வரை பல்வேறு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவ்வாறான தீர்மானங்களை நடைபெற இருக்கும் கூட்டத்தில் பதிய செயலியில் உரிய தலைப்பு மற்றும் உப தலைப்பின் கீழ் சென்று உள்ளீடு செய்ய வேண்டும். 

பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடைபெறும் நாளன்று , உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தைச்  சுற்றி பார்வையிட்டபின், அப்போது கண்டறிந்த தேவைகளை பட்டியலிட்டு  உறுப்பினர்களுடன்  கலந்தாலோசித்து  சேர்ந்து முடிவெடுத்து செயலியில் தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும் . 

தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற குறைந்த பட்சம் 50 சதவிகித உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் 

செயலியில் பதிவிடப்படும் அனைத்து தீர்மானங்களும் பள்ளி மேலாண்மைக்  குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். 

தீர்மானங்களைப் பதிவு செய்யும் போது அதன் விவரங்களை  சரியாக பதிவு செய்ய வேண்டும், 

புகைப்படம் பதிவு செய்ய வேண்டிய தீர்மானங்களுக்கு மிகவும் பொருத்தமான புகைப்படத்தை தேர்வு செய்து  பதிவு  செய்ய வேண்டும். 

சில தீர்மானங்களுக்கு “முன்” மற்றும் “பின்” நிலையைக்  காட்டும் இரண்டு புகைப்படங்களையும், தேவைப்படும் இடங்களில் மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தீர்மானங்களுக்கு  உரிய தகவல்களை உரிய இடத்தில் பதிவு செய்த பின்பு , மேலும்  அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் “விவரிக்கவும் / காரணம்/ விளக்கம்” என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட  இடங்களில்  மட்டும் தட்டச்சு செய்து பதிவு செய்ய வேண்டும் .


தீர்மானங்களின் நிலையை பதிவு செய்யும் போது (Status update ) செய்ய வேண்டியவை :

தீர்மானங்களின் நிலையில் முன்னேற்றம் இருக்கும் போதும், முழுமையாக தேவை பூர்த்தியான பின்பும், நிறைவேறும் போதும், தீர்மான முன்னேற்ற நிலையை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

தீர்மானங்களாக இயற்றிய தேவைகள் முழுமையாக நிறைவடைந்து , வேலை நடந்து முடிந்தால் மட்டுமே, நிறைவேற்றப்பட்டது என்று செயலியில் பதிவு செய்யவேண்டும்.

தேவை முழுமையாகப் பூர்த்தியாகாமல் “நிறைவடைந்தது” என்று பதிவு செய்யப்பட்டால், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளால், தேவை நிறைவடைய எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போய்விடும்.


SMC Meeting on 25.07.2025 - Agenda and guidelines - SPD Proceedings

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25.07.2025 (வெள்ளிக் கிழமை) நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 15-07-2025



School Management Committee Meeting in Government Schools to be held on 25.07.2025 (Friday) - Meeting Agenda and guidelines - Proceedings of the State Project Director, Dated: 15-07-2025



Dear All, 


This is to request you all please do ensure the proceeding for upcoming SMC meeting reaches all schools.


Thanks & Regards,


👇🏻 Upcoming School Management Committee (SMC) meeting scheduled on 25th July 2025.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



SMC Training - SPD Proceedings

 

 

 

SMC : 2025-2026 கல்வியாண்டு - தேர்ந்தெடுக்கப்பட்ட 1878 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்

  

பள்ளி மேலாண்மைக் குழு SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்


காலிப்பணியிடங்களில் SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Teachers can be appointed through SMC in vacant posts from 02-06-2025 - Proceedings of the Chief Education Officer 


02.06.2025 முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை SMC மூலமாக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான பள்ளிக்கல்வி இயக்குநரின் (29.05.2025) குறுஞ்செய்தி மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்


      அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள / மகப்பேறு விடுப்பில் உள்ள / நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை பட்டம், BEd தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ID Card , Letter Pad to SMC Members - SPD Proceedings - Dated : 19-03-2025

 

 




பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID CARD) வழங்குதல், தன் முகவரியிட்ட  கடிதத்தாள்  (Letter pad) அச்சடித்தல் -  வழிகாட்டுதல்கள்  வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண் : 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள் : 19-03-2025


ID Card , Letter Pad to SMC Members - SPD Proceedings - Dated : 19-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Uploading of newly elected SMC members in EMIS by 12.12.2024 - SPD Proceedings

 

 


பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2024-2026 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு  - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம் EMIS-இல் 12.12.2024 தேதிக்குள் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண் : 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள் : 04-12-2024


💥  பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு - தேர்வு செய்யப் பட்ட புதிய உறுபினர்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 12/12/2024


Reconstitution of School Management Committee for the years 2024-2026 - Uploading of newly elected School Management Committee members in EMIS by 12.12.2024 - Issuance of Guidelines - Regarding - SPD Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Sir/Madam,


Sharing the proceedings for last date of completion of SMC members registration. Request you to kindly go through the guidelines and please follow accordingly.


We are planning to close the SMC member registration window on 12.12.2024 - 6pm.  Any addition/deletion or updation can not be done once the data is freezed.


Following reports are shared to follow-up the registration.


1. District & members category wise status and not registered school % - Abstract report

2. School wise alumni members registration status. ( Parent alumni- Max. 3/school, General alumni - Max.1/School to be followed). Schools which have not followed this composition to change the sub-category accordingly.

3. District & school wise status report.


*Requesting your close coordination with BRTEs & HMs to complete the registration on or before 12.12.2024.*


October 2024 Pay Demand Bill Form for Temporary Teachers appointed by SMC


 பள்ளி மேலாண்மை குழு SMC School Management Committee மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு அக்டோபர் 2024 மாத ஊதிய கேட்பு படிவம்


October 2024 Pay Bill Model Form for Temporary Teachers appointed by SMC



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




First Meeting of SMC - School Education Department Phone Message

 

 

 

பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டம் - பள்ளிக் கல்வித் துறையின் அலைபேசி தகவல்...


First Meeting of School Management Committee - School Education Department Phone Message...


பள்ளிக் கல்வித் துறை --

தமிழ்நாடு.... 


செய்தி .


பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு (SMC) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள். 


நமது புதிய SMC-யின் முதல் கூட்டம் வரும் 25.10.2024 அன்று மாலை 3.00 - 4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். 


பள்ளியின் தேவைகள் ஒவ்வொன்றையும் கவனித்து, அவற்றை குழுவாக அனைவரும் கலந்துபேசி தீர்மானங்களாக இயற்றுங்கள். 


பள்ளிக்கூடத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட குழுதான் SMC. குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு. 


SMC-யின் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


பள்ளிக் கல்வித் துறை. 

தமிழ்நாடு.


SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024

 

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் School Management Committee கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 18-10-2024...



SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD & LETTER PAD மாதிரி ( PDF & Word File)



 SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD &  LETTER PAD மாதிரி ( PDF & Word File)


🏠🦹🏻 _*பள்ளி மேலாண்மைக் குழு (SMC - 2024-26) உறுப்பினர்களுக்கு தேவையான*_


1. ID CARD ( PDF Model & Empty File, Word File)


2. LETTER PAD ( PDF File & Word File)


*அனைத்தும் PDF, WORD FILE ஆக ஒரே Linkல் கொடுக்கப்பட்டுள்ளது.*


🔗 https://drive.google.com/drive/folders/1lO5HF2B8kuuqx2RNoq_IxeJFdVPq_Jxj?usp=drive_link


நன்றி!




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Asiriyar Kedayam : July 2025 Magazine

  ஆசிரியர் கேடயம் : ஜூலை 2025 இதழ் Asiriyar Kedayam : July 2025 Magazine  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...