கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (31-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மே 31, 2022



நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : கவலைகள் குறையும்.


பரணி : காரியங்கள் நிறைவேறும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

மே 31, 2022



பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : ஆதரவான நாள்.


ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

மே 31, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : புதுமையான நாள்.


திருவாதிரை : மேன்மை ஏற்படும்.


புனர்பூசம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------





கடகம்

மே 31, 2022



தொழில் தொடர்பான முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும். 


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

மே 31, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெரியவர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மகம் : ஈடுபாடு உண்டாகும். 


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


உத்திரம் : ஆதரவு ஏற்படும்.

---------------------------------------





கன்னி

மே 31, 2022



வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகளை வாங்குவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திரம் : பயணங்கள் கைகூடும். 


அஸ்தம் : உதவி கிடைக்கும்.


சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும். 

---------------------------------------





துலாம்

மே 31, 2022



வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




சித்திரை : தடைகள் குறையும்.


சுவாதி : ஆவணங்கள் கிடைக்கும்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





விருச்சிகம்

மே 31, 2022



எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பம் உண்டாகும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : காலதாமதம் உண்டாகும்.


அனுஷம் : குழப்பமான நாள்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------





தனுசு

மே 31, 2022



எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மூலம் : அனுபவம் உண்டாகும்.


பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

மே 31, 2022



எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : உற்சாகமான நாள். 


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

மே 31, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : அனுபவம் உண்டாகும்.


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





மீனம்

மே 31, 2022



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...