கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை (The circular of the Secretary of the Department of Higher Education regarding the entry of the details of the students who are eligible to get benefit from the Moovalur Ramamirtham Ammaiyar Higher education guarantee Scheme of providing Rs.1000/- per month for students pursuing higher education, who studied in Government Schools) எண்: 01/ ஏ1/ 2022, நாள்: 24-06-2022...



>>> அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை (The circular of the Secretary of the Department of Higher Education regarding the entry of the details of the students who are eligible to get benefit from the Moovalur Ramamirtham Ammaiyar Higher education guarantee Scheme of providing Rs.1000/- per month for students pursuing higher education, who studied in Government Schools) எண்: 01/ ஏ1/ 2022, நாள்: 24-06-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தொழில்நுட்பக் கல்வி , கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை ( Under Graduate ) பயிலும் மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .  ,

 

தற்போது  இத்திட்டத்தினை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.

 

மேற்காண் இணைய தளத்தில் , இத்திட்டத்தில் பயன்பெறும் விவரங்களை 25.06.2022 மாணவியர்களின் முதல் 30.06.2022 க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவிடப்பட வேண்டும்.

 

 அரசுப் பள்ளிகளில் ( Government Schools , Corporation Schools , Municipal Schools , Panchayat Union Schools , Adi Dravidar and Tribal Welfare Schools , Kallar Reclamation Schools , Forest Department Schools and other Schools managed by Government departments ) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிக் கல்லூரிகள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.



 இத்திட்டத்திற்கென இளநிலை ( Under Graduate ) பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள் , வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன.

 

 மாணவியர்கள் கீழ்க்கண்ட ஆவண நகல்களை வழங்க அறிவுறுத்தல் வேண்டும்.

 
 

1. ஆதார் நகல் ,

 

2. வங்கி கணக்கு புத்தக நகல் ,

 

3. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் ,

 

4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் .

 

* விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ( Tutor ) மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

 

சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

* மாணவியர்கள் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால் , அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும்.

 

 * இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு ( முற்பகல் அல்லது பிற்பகல் ) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும். இணைய வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

 

 இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 இத்திட்டத்தினை , தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் 30.6.2022 - க்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.

 

மேலும் , ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...