பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: சான்றாண்மை
குறள் : 982.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
பொருள்
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
பழமொழி :
An hour's cold will such out seven years' heat.
பலநாள் வெயிலை ஒருநாள் மழை தணிக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.
2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்
பொன்மொழி :
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும்
என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,
அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.
உங்களை யாராலும் தடுக்க முடியாது.
ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
- புத்தர்
பொது அறிவு :
1.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை?
33 .
2.காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியா எது?
விப்ரியோ காலரே
English words & meanings :
Scrutiny - close or minute examination.noun. கூர்ந்து ஆய்வு செய்தல். பெயர்ச்சொல்
ஆரோக்ய வாழ்வு :
காலராவுக்கான சிகிச்சை
இழந்த எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் திரவங்களை மாற்றுவதற்கு உங்கள் மருத்துவர் வாய்வழி ரீஹைட்ரேஷன் உப்புக் (ORS) கரைசலை பரிந்துரைப்பார்.
திரவ இழப்பைக் கட்டுப்படுத்த நரம்பு வழி திரவங்கள் செலுத்தப்படும் .
காலரா அறிகுறிகளைக் கட்டுப்படுத்த டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்படும்.
NMMS Q 21:
Objection' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் மூலம் உருவாக்கப்படாத வார்த்தை:
அ) object.
ஆ) caution.
இ) net.
ஈ) jet.
விடை: caution. கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் a மற்றும் u ஆகிய எழுத்துகள் இல்லை. எனவே ' caution' என்ற சொல்லை உருவாக்க முடியாது.
ஜூலை 11
உலக மக்கள் தொகை நாள்
உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
நீதிக்கதை
நரியிடம் ஏமாந்த ஓநாய்
நரி ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீர்ரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்து. கிணற்றின் அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீர்ரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது. மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.
அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது உள்ளே போனதும் நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது ஓநாயைப் பார்த்தது. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலே தாவிக்குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய் ஏமாந்து உள்ளேயே இருந்தது.
நீதி :
ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
11.07.22
🔯தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி ஜூலை 9 அன்று அதிகபட்சமாக 120 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
🔯எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
🔯சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மற்றும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
🔯மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.
🔯இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம்: தப்பி ஓடினார் அதிபர் கோத்தபய ராஜபக்ச - நெருக்கடியால் பதவி விலகினார் பிரதமர் ரணில்.
🔯சூப்பர் டிவிசன் ஹாக்கி: கோல்மழை பொழிந்த எஸ்.டி.ஏ.டி. அணி.
🔯விம்பிள்டன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையரில் ஆஸ்திரேலிய ஜோடி வெற்றி.
🔯டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: திருப்பூர் அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி.
Today's Headlines
🔯 Wind power generation in Tamil Nadu has reached a new peak. According to this, a maximum of 120 mega units of electricity has been generated on July 9.
🔯 Directorate of Technical Education has published the notification regarding the admission of students for MBA, and MCA courses.
🔯 A fine of Rs 15 lakh has been imposed on those who flout garbage in public places and put up posters in violation of rules in Chennai.
🔯 Rains and floods have affected many states. Heavy rain warning continues in Maharashtra and Telangana districts.
🔯Extreme political tension in Sri Lanka: President Gotabaya Rajapaksa fled - Prime Minister Ranil resigned due to the crisis.
🔯Super Division Hockey: S.T.A.D team hit Goal rain
🔯 Wimbledon Tennis: Australian pair won men's doubles
🔯TNPL 20 Over Cricket: Nellie wins by defeating the Tirupur team.