கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை - எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - வன்முறையாளர்களை கண்டறிந்து ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Re-postmortem of dead student of Chinnasalem Kaniyamoor private school - If student dies in school premises in future, case should be transferred to CBCID - Perpetrators should be identified and compensation should be recovered from them - Madras High Court orders)...

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? - நீதிபதி.

வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது - நீதிபதி.

வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்  - நீதிபதி 

சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது - நீதிபதி.

வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.

வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதி

திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல இது. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது - நீதிபதி.

சின்னசேலம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா -  நீதிபதி கேள்வி.

தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது : மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் - மனுதாரர்.

மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவு.

பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர், வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் - நீதிபதி.

எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - நீதிபதி உத்தரவு.

கலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை - நீதிபதி

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்

-  உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் ஆணை

கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? - கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வி.

உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் ?

போராட்டத்திற்கு ஆதரவாக வாட்சப் மூலம் அழைப்பு விடுத்ததாக கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? - நீதிபதி கேள்வி.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாமா? - கரூர் குற்றவியல் நீதிபதி .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...