காலியாக உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்பொழுது நிரப்பப்படும் என்பது குறித்தான நமது கேள்வியும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் விளக்கமும்...
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலாளர் அய்யா செ.மு அவர்கள் தலைமையில் மாநிலத் தலைவர் ரக்ஷித் துணைப்பொதுச் செயலாளர் சாந்தகுமார், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை வியாழன் மாலை 3 மணி அளவில் சந்தித்தனர்.
அப்பொழுது
கடந்த பதவி உயர்வு கலந்தாய்வின் பொழுது கூடுதல் முன்னுரிமை பட்டியல் தயாரிக்காத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு பணியிடங்களும் தற்பொழுது 1.6.2022க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்டுள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு விரைந்து நடத்திட வேண்டும் எனக் கேட்டோம் .
காரணம் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்க உள்ளனர் .
அதே நேரத்தில் காலியாக உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே அப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்திட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் பதில்
இன்றைய தினம் (4.8.22) முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கையை அனுப்பியுள்ளேன் .
அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும்.
உடன் அட்டவணை வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதிக்குள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு முடிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார்.
தகவல்
கே.பி.ரக்ஷித்.
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி