கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...



EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...


EMIS மற்றும் TNSED App குறித்து ஆசிரியர்களிடையே நிலவும் அதிருப்தியை தெரிவித்தோம் . அதற்கு அவர் EMIS என்பது தவிர்க்க இயலாதது . நாம் e-governance முறைக்கு மாற வேண்டும் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இது என்றும், இது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். மேலும் EMIS App  வாயிலாக ஆசிரியர்களின் வேலைப்பளு குறைக்கப்படும். மாதாந்திர அறிக்கை, Pay Bill, Aquittance , மதிப்பெண் பட்டியல்கள், இலவச சீருடை, புத்தகம், நோட்டு வழங்கிய பட்டியல் போன்றவைகள் இனி எமிஸ் இணையதளம் வாயிலாகவே தயாரித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டி வராது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர்களும் TNSED App  மூலம் தனக்கு தேவையான விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடுமுறை கடிதங்களை கொடுத்துவிட்டு அது ஒப்புதல் பெறப்படுமா அல்லது பெறப்படாதா என்று வட்டாரக்கல்வி அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர்களிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி ஆசிரியர்களுக்கான பணிப்பளுவை குறைப்பதற்காக இந்த ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


அப்பொழுது ஆசிரியர்களுக்கு பல இடங்களில் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் Configuration  குறைவாக இருப்பதால் Attendance போடுவதிலும் இன்டர்நெட் கிடைப்பதிலும் சிரமமாக இருக்கிறது. எனவே கல்வித் துறையே உயர்தர Configuration (6gb ram ,128 gb inbuilt memory) கொண்ட செல்போன் வழங்கி அதற்கு சிம் வழங்கி அந்த சிம்மில் இன்டர்நெட் கனெக்சன்  மற்றும்  டேட்டா ஆகியவற்றை துறைசார்பாக  வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் . மேலும் அவ்வாறு வழங்கும்பொழுது அதை கல்வித்துறைப்பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத வகையில் Lock செய்து (தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பொழுது அவர்கள் பணியைத் தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாததை போன்று) வழங்குங்கள் அல்லது இன்டர்நெட் மற்றும் டேட்டா இணைப்புடன் கூடிய சிம்கார்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.


 இது சார்பாக நிதித்துறை அலுவலர்களுடன் பேசி வருவதாகவும் Device வழங்குவதா அல்லது டேட்டா வித் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்குவதா என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக ஆணையாளர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார் 


தகவல் கே.பி.ரக்ஷித்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...