கரூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் நூலன், நூலி உருவப்படம் வெளியீடு (Slender Loris Noolan - Nooli Logo released on the occasion of karur book festival)...
கரூரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரூரின் பிரசித்தி பெற்ற தேவாங்கு விலங்கு உருவிலான நூலன், நூலி என்ற அடையாள சின்னத்தை வெளியிட்டார்கள்...
தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் ‘நூலன்-நூலி’ என்ற பெயரில் கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர், கரூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புத்தக திருவிழாவிற்கான அடையாளப் படம்(லோகோ) வெளியிடப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இதனை வெளியிட்டார்.
தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'நூலன்-நூலி' என்ற பெயரில் இந்த கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரபு சங்கர், பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை போற்றும் வகையிலும் 'நூலன்-நூலி' கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.