கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (SMC Meeting) - முதன்மைக் கல்வி அலுவலர் - தெளிவுரைகள் (School Management Committee Meeting - Chief Education Officer's Guidance)...



 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் -  தெளிவுரைகள் - முதன்மைக் கல்வி அலுவலர் - கோவை மாவட்டம்....



 30ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக் கட்டமைப்புகள் நிகழ்த்தப்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும்  கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

  

இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்


SMC - Parents App Update செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

user name : Mobile number

password : Smc@last 4 digit of the phone no.



இந்த மாதத்திற்கான தீர்மானத்தையும் இணைத்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அவற்றை விளக்கமாக பேச வேண்டும்.



பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள், வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி  செயல்பாடுகள்,  பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.



பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது.



கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகைப்படங்களை எடுத்து வட்டார வளமையத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்த்தப்பட்ட பள்ளிகளில் 20 உறுப்பினர்களின் விவரங்களை Emis ல் Update செய்திருக்க வேண்டும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக அவற்றை Update செய்யவும்.



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடைபெறும் நாளில் தவறாமல், மறவாமல் Emis parents app இல் வருகை பதிவேட்டை அன்றைய தினமே பதிவிட வேண்டும்* பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்.



வருகை பதிவை காலதாமதமாக பதிவிட்டால் அன்றைய நாளில் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் நீங்கள் பதிவிடும் நாளிலே கூட்டம் கூட்டப்பட்டதாக மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பட்டியலிடப்படும் ஆகையால் கூட்டம் தொடங்குவதில் முதல் நிகழ்வாக வருகை பதிவேட்டை பதிவிட வேண்டியது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது.



சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை நமது மதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனிப்பதால் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் வீடியோ லிங்க் இணைக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவது.



அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) மற்றும் Letter pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும் ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

    2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும...