கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) குறித்த 14 தகவல்கள் (14 information about school management committee meeting)...



 அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும்...


1.   இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

   

 2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.


5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username &password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.


  6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள  கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .


7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 2.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.


8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்  தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.


9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல்  login செய்து SMC Reconstution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.


11.TNSED parents app ல் login ஆகவில்லை என்றால் பள்ளி udise நம்பர் உடன் வட்டார வள மையத்திற்கு  மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு  (தலைவர், தலைமை ஆசிரியர்) update செய்யப்பட்டிருந்தால்  username does not exist என்று வரும்.


13. மேற்கண்ட விவரங்களை உடன் சரி பார்த்திட அனைத்து அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...