கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இறுதி விசில் - படித்ததில் பிடித்தது (Final Whistle - Favorite read)...



 🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️


இறுதி விசில் - படித்ததில் பிடித்தது


👍👍👍👍👍👍👍👍👍👍👍


நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.



நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.


அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான்.



நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னேன்.


சிறுவன் குழப்பமான பார்வையுடன்,

என்னை, என் மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,


நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள்? என தீர்க்கமான  கேள்வி ஒன்றை கேட்டான். 


எங்கள் அணி மற்றும்  பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.


 நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டத்தை கவனித்தான்.


உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.


வெற்றியை அறிவித்ததும்,

அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.


பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.


 நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன். 


 அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.


அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.


நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்?

என்ற அவன் கேள்வி என்னை உறங்கவிடவில்லை.



வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....


வாழ்ந்து கொண்டு இருக்கும் போது,  நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.


நமக்கான  இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.


உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை நாமாகவே ஊதிக்கொள்கிறோம்.

ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.


ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை., 


நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால்வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்....  

அது முக்கியம் அல்ல.... 


ஆனால், காலம் முடியும் முன், நாமே விசில் அடிக்க கூடாது..


நம் ஆட்டத்தின் நடுவர் கடவுள்...


அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்...


எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதை உணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டைப் போல ரசிப்போம்...


✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...