கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது - சிறந்த தங்குமிடப் பள்ளிகளில் தங்கள் குழந்தையை சேர்க்க நினைக்கும் அனைத்துப் பெற்றோருக்கும் (Father writing to his beloved son - For all parents who are thinking of enrolling their child in the best boarding schools)...



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது - சிறந்த தங்குமிடப் பள்ளிகளில் தங்கள் குழந்தையை சேர்க்க நினைக்கும் அனைத்துப் பெற்றோருக்கும் (Father writing to his beloved son - For all parents who are thinking of enrolling their child in the best boarding schools)...


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது,


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.


பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது..!


முதல் தரமிக்க இந்த முதியோர் இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட, அன்று உனக்காக நானும் பொருத்தமான தங்குமிடப் பள்ளி (Boarding School) எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்.


இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது...


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், உன்  படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்.


உன் இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை, என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… 

உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.


நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…

வாழ்க்கை இதுதானென்று....!

நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…

உறவுகள் இதுதானென்று....!


அன்புடன், 

அப்பா...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இறுதி விசில் - படித்ததில் பிடித்தது (Final Whistle - Favorite read)...



 🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️🖍️


இறுதி விசில் - படித்ததில் பிடித்தது


👍👍👍👍👍👍👍👍👍👍👍


நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.



நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.


அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான்.



நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னேன்.


சிறுவன் குழப்பமான பார்வையுடன்,

என்னை, என் மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,


நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள்? என தீர்க்கமான  கேள்வி ஒன்றை கேட்டான். 


எங்கள் அணி மற்றும்  பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.


 நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டத்தை கவனித்தான்.


உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.


வெற்றியை அறிவித்ததும்,

அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.


பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.


 நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன். 


 அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.


அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.


நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்?

என்ற அவன் கேள்வி என்னை உறங்கவிடவில்லை.



வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....


வாழ்ந்து கொண்டு இருக்கும் போது,  நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.


நமக்கான  இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.


உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை நாமாகவே ஊதிக்கொள்கிறோம்.

ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.


ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை., 


நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால்வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்....  

அது முக்கியம் அல்ல.... 


ஆனால், காலம் முடியும் முன், நாமே விசில் அடிக்க கூடாது..


நம் ஆட்டத்தின் நடுவர் கடவுள்...


அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்...


எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதை உணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டைப் போல ரசிப்போம்...


✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...