தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...
விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான்...
தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அப்படி வழிபடுவதே உத்தமம்!
அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம். இதன் அடிப்படையில் தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடவேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...