கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (08-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 08, 2022



வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : லாபம் உண்டாகும். 


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : நிதானம் வேண்டும்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 08, 2022



கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : பிரச்சனைகள் குறையும். 


ரோகிணி : வாய்ப்புகள் கைகூடும். 


மிருகசீரிஷம் : தீர்ப்பு கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 08, 2022



மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும். 


திருவாதிரை : புத்துணர்ச்சி உண்டாகும்.


புனர்பூசம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------



கடகம்

நவம்பர் 08, 2022



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும். தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதம் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூசம் : புரிதல் உண்டாகும். 


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 08, 2022



நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மகம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரம் : வெற்றி கிடைக்கும். 


உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.   

---------------------------------------



கன்னி

நவம்பர் 08, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய ஆபரணம் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். அன்பு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : சேமிப்பு குறையும். 


அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 08, 2022



வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் புரிதல் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : சாதகமான நாள். 


சுவாதி : தெளிவு பிறக்கும். 


விசாகம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 08, 2022



வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். தனவரவு தாராளமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மன நிறைவை கொடுக்கும். வங்கி கடன் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அனுஷம் : சுறுசுறுப்பான நாள்.


கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 08, 2022



இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : உதவி கிடைக்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 08, 2022



பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை பற்றிய புரிதல் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து செல்லவும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


திருவோணம் : புரிதல் ஏற்படும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 08, 2022



விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சதயம் : நன்மை ஏற்படும்.


பூரட்டாதி : மரியாதை அதிகரிக்கும். 

---------------------------------------



மீனம்

நவம்பர் 08, 2022



குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...